அணையும் விளக்கு

எண்ணெயை
அவ்வப்போது ஏற்றிக்
கொள்கிறது தீபம்.

அங்குமிங்குமாய்
ஆடும் ஊசலாய்
ஆடி ஆடி அலைகிறது
தீபம்.

எண்ணெயினை
ஏற்றிக் கொண்டும்
அணைகிற வரை
அலைந்து கொண்டும்
இருக்கும் தீபம்
ஆடும் குடிகாரனின்
ஆக்ரோஷ
உருவத்தைக் காட்டி.

Series Navigationநானும் நம்பிராஜனும்மூளையும் நாவும்