அந்திமப் பொழுது

Spread the love

ஜி.ஜே. தமிழ்ச்செல்வி ​

அந்திமப் பொழுதென்கிறாய்
உன் முகம் கண்டு விடியும்
என் வாழ்வினைப் பார்த்து.
​​.

அன்பினால் வருடி
உயிரினால் பிரசவித்தாய்
காதல் பொழுதுகளை.
​​.

பார்க்காதிருந்தும்
பேசாதிருந்தும்
கூடாதிருந்தும்
நேசத்தின் வேர்
​வாடி யிருக்க வில்லை.
​.​

ஒரு வார்த்தையில்
துளிர்விட்ட கண்ணீரும்
நம் நேசத்தின் சாரலையே
உலகில் தூவிச் செல்கிறது
​.​

இப்பொழுது பேசு
காதலின் உயிரூட்டத்தை
ஊடலின் உயிரோட்டத்தை
அந்திம எண்ணத்தை தள்ளி வை.

உன்னோடு ஒருகால்
என் வாழ்வும் அத்தமிக்கக் கூடும்
நெடுநாள் வாழ்ந்திரு
என் நேசத்திற்காக

Series Navigationஆனந்த பவன் நாடகம்தமிழ்ச்செல்வி கவிதை நூல் வெளியீடு அறிவிப்பு