அந்த இடைவெளி…

இரைதேடச் செல்லும் பறவை
இரையாகிப்போகிறது எங்கோ..
இறைதேடிச் செல்பவன்
இறையாகிவிடுகிறான் இறந்து..
தொடங்கிடும் பயணமெல்லாம்
தொடுவதில்லை இலக்கை..
தெடக்கத்திற்கும் முடிவுக்குமுள்ள
இடைவெளிதான்
இயற்கையோ- இறையோ…!

-செண்பக ஜெகதீசன்…

Series Navigationஜீ வி த ம்பஞ்சதந்திரம் தொடர் 15 அன்னமும் ஆந்தையும்