அமீரகத் தமிழ் மன்றம் சார்பில் இலவச கணினி பயிலரங்கம்

Spread the love

கணினியில் தமிழை திறம்பட பயன்படுத்துவது தொடர்பான சிறப்பு கணினி பயிலரங்கம் அமீரகத் தமிழ் மன்றம் சார்பில் துபாயில் நடத்தப்படுகிறது.

தமிழை கணினியில் சரளமாக எழுதுவதற்கான நுட்பங்கள், மின்னஞ்சல், செல்பேசி, முகநூல் மற்றும் பேச்சரங்கு போன்றவற்றில் தமிழை பயன்படுத்துவது எப்படி, வீட்டு கணினிகளில் தமிழ் மென்பொருட்களை சுலபமாக பொருத்துவது எப்படி என்பது போன்ற பல்வேறு முக்கிய அம்சங்களை இப்பயிலரங்கின் மூலம் தெரிந்துகொள்ளலாம்.

மேலும், பயிலரங்கில் தமிழ் மென்பொருள்களும், தமிழ் எழுத்துருகளும் இலவசமாக வழங்கப்படும். இப்பயிலரங்கில் பங்கேற்க கட்டணம் எதுவும் இல்லை. விருப்பமுள்ளவர்கள் மேலும் அதிக விபரம் தெரிந்து கொள்ள atmuae@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு மடலிடவும் அல்லது 050 3445375 என்ற செல்பேசியில் தொடர்பு கொள்ளவும்.

பங்கேற்க விரும்புவோர் கட்டாயம் முன்பதிவு செய்யவேண்டும்.

வருகிற 20ம் தேதி மாலை 5.30 மணிக்கு பயிலரங்கம் நடைபெற உள்ளது. பயிலரங்கம் நடக்குமிடம் முன்பதிவின் போது தெரிவிக்கப்படும்.

மிக்க நன்றி
ஜெஸிலா

Series Navigationபாசம் பொல்லாததுதமிழ் செல்வனின் ‘ கொள்ளைக்காரன் ‘