ஆகஸ்ட்-15 நூலுக்கு மெய்யப்பன் அறக்கட்டளை விருது

Spread the love

மெய்யப்பன் விருது 03

 

பதிப்புச் செம்மல் மெய்யப்பன் அறக்கட்டளை விருது விழா நேற்று சிறப்பாக நடைபெற்றது. மெய்யப்பன் அறக்கட்டளைத் தலைவர் ச.மெ.மீனாட்சி சோமசுந்தரம் வரவேற்புரை ஆற்றினார். பத்மஸ்ரீ டாக்டர் நல்லி குப்புசாமி செட்டியார், சிலம்பொலி செல்லப்பனார், தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக் கழக முன்னாள் துணை வேந்தர் முனைவர் அவ்வை நடராசன், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழக முன்னாள் துணைவேந்தர் முனைவர் க.பா. அறவாணன், எழுத்தாளர் ராசேந்திர சோழன், திரைப்பட இயக்குநர் எஸ்.பி.முத்துராமன், தமிழறிஞர் பேராசிரியர் ச.வே.சுப்பிரமணியன், கவிஞர் பொன் செல்லமுத்து, கவிஞர் பல்லடம் மாணிக்கம், இலக்கியச் செல்வர் குமரி அனந்தன், எழுத்தாளர், பத்திரிகையாளர் லேனா தமிழ்வாணன், பால சாகித்ய அகாதமி விருதுபெற்ற எழுத்தாளர் கமலவேலன் உட்பட பல அறிஞர் பெருமக்கள் கலந்து கொண்டனர். குமரி எஸ்.நீலகண்டனின் ஆகஸ்ட்15 என்ற நாவலுக்கும் ராசேந்திர சோழனின் மொழிக் கொள்கை என்ற நூலுக்கும் 2012 ஆம் ஆண்டிற்கான சிறந்த நூலுக்கான விருது வழங்கப் பட்டது.

 

 

Series Navigationஉள்ளே ஒரு வெள்ள‌ம்.டௌரி தராத கௌரி கல்யாணம்…! – 8