ஆப்பிள்-ன் புதுமைக் கடவுள் ஸ்டீவ் ஜாப்ஸ்- சில தகவல்கள்

அக்டோபர் 6, 2011 ஆப்பிள் விரும்பிகளுக்கு ஒரு சோகமான நாள். 27 ஆண்டுகளாக ஒரு ஆப்பிள்-ஐ அழுகாமல் வைத்துக் கொண்ட புதுமை கடவுள் மறைந்த நாள். தன்னுடைய வித்யாசமான யோசனைகளால் கணினி மற்றும் செல்பேசி தொழில் நுட்பத்தை அழகுபடுத்தியவர் என்ற முறையில், உலகெங்கிலும் உள்ள ஆப்பிள் ரசிகர்கள், அவருக்காக பிராத்தனை செய்கின்றனர். அவர் உருவாக்கிய பல பொருட்களைப் பற்றித் தான் சில நாட்களாக அதிகம் கூகுள் செய்யப் படுகிறது. அவர் இறந்தது எப்படி? அவர் சாதனைகள் என்ன? அவருடைய வாழ்க்கைப் பாதை பற்றிய செய்திகள் ஆகியவற்றை சுருக்கமாக பார்ப்போம்.

பிறப்பு மற்றும் படிப்பு: பெப்ரவரி 24, 1955 -ல் பிறந்த இவர், தத்தெடுக்கப் பட்டு ஸ்டீபென் பால் ஜாப்ஸ் என்ற பெயர் பெற்றார்.1972 ஆம் ஆண்டு ஒரேகோன்-இல் உள்ள ரீட் கல்லூரியில் சேர்ந்து ஒரே ஒரு செமஸ்டர் முடிந்த நிலையில் கல்வியை நிறுத்திக் கொண்டார்.

ஸ்டீவ் வோஸ்னைக்: ஜாப்ஸ்-உடைய நண்பரான இவர், ஹோம்பிரியு கம்பியூட்டர் க்ளப் சார்பில் நடக்கும் கூட்டங்களுக்கு 1974 இல் ஜாப்ஸ்-ஐ அழைத்துச் செல்வார். அதே நேரம், அடாரி என்ற வீடியோ கேம் உருவாக்கும் நபருக்கு, ஜாப்ஸ் வேலை செய்தார். ஜாப்ஸ்-உம், ஸ்டீவும் சேர்ந்து வாகனம் நிறுத்துமிடத்தில் வைத்து ஒரு சர்கியுட் போர்ட்-ஐ தயாரித்தனர். இதற்குப் பிறகு, 1976 இல் முதல் ஆப்பிள் கணினி, ஏப்ரல் ஒன்றாம் தேதி வடிவமைக்கப் பட்டது. அந்த கோடைக் காலத்தில் இக்கணினி விற்பனைக்கு வந்தது. இந்த கணினி, பொறியியலாளர்களுக்கும் பொழுதுபோக்கிற்காக உபயோகிப்பவர்களுக்கும் உருவாக்கப் பட்டது. ஸ்டீவ் வடிவமைக்க, சந்தைப் படுத்துதலை ஜாப்ஸ் பார்த்துக் கொண்டார்.

முதல் கலர் கிராபிக்ஸ்: இரண்டாம் ஆப்பிள் என்று அழைக்கப் பட்ட ஒரு கணினி, கலர் கிராபிக்ஸ்-உடன் விற்பனைக்கு வந்தது. இது நடந்த வருடம் 1977 . இந்த கணினி பெரும் வரவேற்ப்பு பெற்று 1993 வரை விற்பனையில் இருந்தது.

லிசா: ஜாப்ஸ், அவருடைய துணைவி சரிஸ்-அன் ப்ரேன்னன் இருவருக்கும் லிசா என்று பெயரிட்ட குழந்தை 1978 -ல் பிறந்தது. இந்த குழந்தையின் பெயர் கொண்டே 1983 -ல் லிசா என்ற கணினியை விற்பனைக்கு வந்தது. இந்த கணினி தான் முதன் முதலில் கிராபிக் யூசர் இன்டர்ஃபேஸ்-ஐயும், மவுஸ் மூலமாக கர்சர் அசைவையும் அறிமுகப் படுத்தியது. ஆனால் இந்த கணினி மிகவும் விலைமதிப்புள்ள பொருளாக இருந்ததால் வியாபார ரீதியான வெற்றியைப் பெறவில்லை. இதைத் தவிர, இதே காலக் கட்டத்தில் தான் ஜான் ஸ்கல்லி என்பவரை கவர்ந்து பெப்சிகோ நிறுவனத்திலிருந்து வெளியேறச் செய்து, ஆப்பிள் நிறுவனத்தின் சி.ஈ.ஒ வாக நியமித்தார் ஜாப்ஸ்.

மசிண்டோஷ்: ஆப்பிள் நிறுவனம் பெரிய அளவில் பிரபலம் அடையக் காரணமாய் இருந்த அடுத்த கண்டுபிடிப்பு. 1984 ல் வெளியான மசிண்டோஷ், லிசா கணினி கொடுத்த வசதிகளை குறைந்த விலையிலும், அதிக வேகத்திலும் கொடுத்தது. இந்த புதுப்பித்தல், மசிண்டோஷ்-ஐ வெற்றி காண வைத்தது.

                      

பதவி துறத்தல்: பெப்சிகோவிலிருந்து ஆப்பிள்-இற்கு வந்த ஜான் ஸ்கல்லி, ஜாப்ஸ்-உடன் மோதலில் ஈடுபட, ஜாப்ஸ்-உம், ச்டீவும் 1985 -ல் பதவி விலகினார். இதை அடுத்து ஒரே ஆண்டில் நெக்ஸ்ட் இன்க் (neXT inc) என்ற நிறுவனத்தை ஜாப்ஸ் தொடங்கி, ஸ்டார் வார்ஸ்-ஐ உருவாக்கிய ஜார்ஜ் லூகஸ்-இடமிருந்து பிக்சர் அனிமேஷன் ஸ்டுடியோவை வாங்கினார். இந்த நிறுவனத்தின் சார்பாக 1989 ல் ஒர்க் ஸ்டேஷன் கணினி ஒன்றை தயாரித்து குறைந்த அளவில் விற்பனை செய்தனர். இந்த கணினியின் மென் பொருள், மசிண்டோஷ் மற்றோம் ஐபோனின் ஓ.எஸ்-ஐ அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப் பட்டது.

ஆப்பிள்ன் வீழ்ச்சி: ஜாப்ஸ் வெளியேறிய பிறகு நான்கு ஆண்டுகள் போராடிய ஆப்பிள், 1993 ல், 188 மில்லியன் அமெரிக்க டாலர்கள் நஷ்டம் கண்டது. இதனை அடுத்து ஜாப்ஸ்-உடன் சண்டையிட்ட ஜான் வெளியேறினார். அதற்குப் பின் 1995 வரை, போட்டிகளுக்கு ஈடு கொடுக்க முடியாமல் திணறிய ஆப்பிள், 1996 ல் ஜாப்ஸ்-ன் நெக்ஸ்ட் நிறுவனத்தை வாங்க முடிவெடுத்தது. ஆலோசகராக ஜாப்ஸ் மறுபடியும் நுழைந்தார். ஒரு வருடம் கழித்து ஜாப்ஸ் இடைக்கால சி.ஈ.ஓ ஆக்கப் பட்டர்.

            

மறுபடியும் ஆப்பிள் வளர்ந்தது: ஜாப்ஸ்-ன் மூளை மறுபடியும் கிடைத்ததால், ஐமாக் என்ற புதிய கண்டுபிடிப்போடு ஆப்பிள் மறுபடியும் வளர்ச்சிப் பாதையில் அடிஎடுத்து வைத்தது. 1998- ல் ஐமாக் டெஸ்க் டாப் ஒரு மயில் கல்லாக அமைந்தது. இதை அடுத்து, 2000- ஆவது ஆண்டில் இடைக்கால சி.ஈ.ஓ-வாக இருந்த ஜாப்ஸ், நிரந்தர சி.ஈ.ஓ ஆக்கப் பட்டார்.

ஐபாட்: 2001 ஆம் ஆண்டு, ஐபாட் என்ற டிஜிடல் மியூசிக் ப்ளேயர்-ஐ அறிமுகம் செய்தது ஆப்பிள். இந்த வகையில் இது முதல் கண்டுபிடிப்பு அல்ல என்றாலும், ஐபாட் தான் முதன் முதலாக வியாபார வெற்றி பெற்ற டிஜிடல் மியூசிக் ப்ளேயர். இதே காலக் கட்டத்தில் தான் ஆப்பிள் நிறுவனம், ஐடியூன் மென் பொருளை வெளியிட்டது.

                             ஐடியூன் ஸ்டோர்: 2003 இற்கு முன்னாள் வரை டிஜிடல் இசையை பெறுவது பெரும்பாடாக இருந்தது. ஐடியூன் ஸ்டோர்-ஐ ஆப்பிள் அறிமுகம் செய்த பின்பு தான் இந்த வழிமுறை சுலபமானது.

ஜாப்ஸ் உடல் நிலை பாதிப்பு: 2004 ல், சதைய புற்றுநோயால் (Pancreatic cancer) பாதிக்கப் பட்டு அறுவை சிகிச்சை மேற்கொண்டார் ஜாப்ஸ்.

           

ஐபோன்: ஜாப்ஸ்-ன் உடல் நிலை சரியில்லை என்று வதந்திகள் 2008 ல் பரவ ஆரம்பித்தது. அதற்கு முன்னதாக, 2007 ல் ஆப்பிள்-ன் அடுத்த பெரிய வெளியீடான ஐபோன் வெளியானது. கணினி உபயோகத்தில் மசிண்டோஷ் செய்த புரட்சியை, மொபைல் உபயோகத்தில் ஐபோன் செய்தது.

ஈரல் மாற்றுச் சிகிச்சை: 2009 ல் வதந்திகளுக்கு முற்றுப் புள்ளி வைக்கும் விதமாக, ஜாப்ஸ் ஈரல் மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ள விடுமுறையில் சென்றார்.

        

ஐபாட்: ஜாப்ஸ்-ன் உடல் நிலை கவலை அளிக்கும் விதமாக இருந்தாலும், ஐபாட் என்ற டேபிள் கணினியை ஆப்பிள் அறிமுகம் செய்தபோது மிகப் பெரிய வெற்றி பெற்று, பதினைந்து மில்லியன் ஐபாட்கள் விற்பனை ஆயின. இந்த நல்ல செய்தியோடு, கெட்ட செய்தியும் சில மாதங்களில் வெளிவந்தது.

ஆகஸ்ட், 2011 : ஜனவரி-ல் மறுபடியும் மருத்துவ விடுமுறை எடுத்துக் கொண்ட ஜாப்ஸ், ஆகஸ்ட் 24 -ஆம் தேதி, தன் சி.ஈ.ஓ பதவியை ராஜினாமா செய்தார்.

அக்டோபர், 2011 : ஸ்டீவ் ஜாப்ஸ் என்ற புதுமைக் கடவுள், சதைய புற்றுநோயால் இயற்கை எய்தினார்!

ஜாப்ஸ்-இற்குப் பிறகு, குக்ஸ் என்பவர் ஆப்பிள்-ஐ வழி நடத்தவுள்ளார். இவரின் செயல்பாடும், ஆப்பிள்-ன் எதிர்காலமும் எப்படி இருக்கப் போகிறதென்று வருங்காலம் சொல்லும். ஆனால், ஆப்பிள்-ன் இரும்புக் கையாக இருந்த ஒருவர் இறந்தது, அந்த நிறுவனத்திற்கும், அவர் உருவாக்கிய பொருட்களின் ரசிகர்களுக்கும் ஒரு பேரிழப்பு தான்.

Series Navigationஅவரோகணம்கரும்புள்ளியின்மீது விழும் வெளிச்சம் ( ”தேவந்தி” என்னும் சுசிலாவின் சிறுகதைத்தொகுப்புக்கு எழுதிய முன்னுரை