இங்கு

Spread the love

அமீதாம்மாள்

சிறகு சிறை

இரண்டுமே  இதுதானாம்

துளிர்களே இங்கு

வேர்களாம்

வியர்வையே இங்கு

‘கொடை’ களாம்

செலவுகளே இங்கு

வரவுகளாம்

கண்ணீரே இங்கு

உறவுகளாம்

தலைமுறைப் பாலங்கள்

இங்குதானாம்

கோடையோடு

வசந்தமும் இங்குதானாம்

நடவும் அறுவடையும்

இங்குதானாம்

பூட்டும் சாவியும்

இடம் மாற்றிக் கொள்வது

இங்குதானாம்

அறுசுவையும் இங்குதானாம்

நவரசமும் இங்குதானாம்

வெற்றிலை பாக்கு

சுண்ணாம்பு சிவப்பு

தத்துவமாவது இங்குதானாம்

விளக்கு எண்ணெய்

திரி பொறி

விளக்கமாவது இங்குதானாம்

மன்னிப்பேகூட

தண்டனையாவது இங்குதானாம்

நீ உண்ண நான்

பசியாறுவது இங்குதானாம்

அழுக்காவதும்கூட

அழகாவது இங்குதானாம்

ஆசிரியர்

மாணவராவது இங்குதானாம்

நட்டகல் நட்சத்திரமாய்

உயர்வது இங்குதானாம்

மனித வரலாற்றின்

புரட்சிப் பக்கங்கள்

புரட்டப்பட்டதும் இங்குதானாம்

எங்குதானாம்?  அது

‘குடும்ப’ த்தில்தானாம்

அமீதாம்மாள்

இரண்டுமே  இதுதானாம்

துளிர்களே இங்கு

வேர்களாம்

வியர்வையே இங்கு

‘கொடை’ களாம்

செலவுகளே இங்கு

வரவுகளாம்

கண்ணீரே இங்கு

உறவுகளாம்

தலைமுறைப் பாலங்கள்

இங்குதானாம்

கோடையோடு

வசந்தமும் இங்குதானாம்

நடவும் அறுவடையும்

இங்குதானாம்

பூட்டும் சாவியும்

இடம் மாற்றிக் கொள்வது

இங்குதானாம்

அறுசுவையும் இங்குதானாம்

நவரசமும் இங்குதானாம்

வெற்றிலை பாக்கு

சுண்ணாம்பு சிவப்பு

தத்துவமாவது இங்குதானாம்

விளக்கு எண்ணெய்

திரி பொறி

விளக்கமாவது இங்குதானாம்

மன்னிப்பேகூட

தண்டனையாவது இங்குதானாம்

நீ உண்ண நான்

பசியாறுவது இங்குதானாம்

அழுக்காவதும்கூட

அழகாவது இங்குதானாம்

ஆசிரியர்

மாணவராவது இங்குதானாம்

நட்டகல் நட்சத்திரமாய்

உயர்வது இங்குதானாம்

மனித வரலாற்றின்

புரட்சிப் பக்கங்கள்

புரட்டப்பட்டதும் இங்குதானாம்

எங்குதானாம்?  அது

‘குடும்ப’ த்தில்தானாம்

அமீதாம்மாள்

Series Navigationஇதுவும் ஒரு காரணமோ?  (அல்லக்)கைபேசி !