இன்னும் வெறுமையாகத்தான்…

 

நான் சொல்லி

நீ கேட்க வேண்டிய வயது

உனக்கும்

எனக்கும்

உன் இடதுபுறம்

போய்க் கொண்டிருக்கும்

அந்த நிர்வாணிகளின்

பக்கம் திரும்பாதே

உன் வலதுபுறம்

சர்வ அலங்காரங்களோடு

போய்க் கொண்டிருக்கும்

உன் சகாக்களைப் பார்

வெறுக்கையை வெகுநேரம்

மூடிக்கொண்டிருப்பதால்

உள்ளே

ஒன்றும் முளைத்துவிடாது

உன் முதல் வேலை

முயற்சியென அறிந்துகொள்

நிர்வாணம்

குழந்தைமையோடுதான் பொருந்தும்

உன்னோடல்ல

உன் பாதப் பதிவுக்கென

உரிய இடம் இன்னும்

வெறுமையாகத்தான் இருக்கிறது

            ————–

Series Navigationவாங்க ஸார்… டீ சாப்பிடலாம்மதுபானக்கடைகளைத் திறக்க இதுதானா நேரம்?