இரண்டு கூட்டங்கள்

Spread the love


 

வாழ்த்த ஒரு கூட்டம்

தூற்ற ஒரு கூட்டமின்றி

வாழ்க்கையே இல்லை

 

அவன் நெருப்பில் எழுதி

நீரில் பொட்டு வைப்பான்

நுனி நாக்கசைவில்

நோபல் வெல்வான்

அவனுக்கு முண்டு

இரண்டு கூட்டங்கள்

 

அவன் புன்னகை வீச்சில்

வெளிச்சமாகும் இரவு

தெறிக்கும் ஒரு சொல்லில்

எரியும் கடல்வெளி

அவனுக்கு முண்டு

இரண்டு கூட்டங்கள்

 

அவன் பெயரோ கால்வரி

பட்டங்களோ மூன்று வரிகள்

அவனுக்கு முண்டு

இரண்டு கூட்டங்கள்

 

வரிகளற்ற பட்ஜெட் சாத்தியம்

அவனின் ஸ்விஸ் வங்கிப் பணத்தில்

அவனுக்கு முண்டு

இரண்டு கூட்டங்கள்

 

ஒரே ஒரு கூட்டம் சாத்தியம்

 

அவன் மரணித்தபின்

அவன் படைப்புக்கள்

அதைத் தீர்மானிக்கும்

 

அமீதாம்மாள்

 

Series Navigationஇதற்கும் அப்பால்சமனில்லாத வாழ்க்கை