ஏறி இறங்கிய காலம்

 

  • சேயோன் யாழ்வேந்தன்

 

அணையில்லாக் காலங்களில்

ஆண்டெல்லாம் நதிபெருகி

சாலையோரக் குழிகளிலும்

துள்ளியாடும் கெண்டைகளில்

ஒன்றிரண்டை ஈர்க்கில் கோர்த்து

சுள்ளிகளைச் சேகரித்துச் சுட்டுத்தின்ற

காலமெல்லாம் மலையேறிப் போச்சு என

அங்கலாய்த்து, பின்னொரு நாள்

மலையேறிப் பார்த்தபோது சொன்னார்கள்

அவர்கள் காலமும்

மலையிறங்கிப் போயிடுச்சாம்.

Series Navigationநீங்கள் கொல்லையிலே போக.15ஆவது உலகத்தமிழ் இணைய மாநாடு வருகின்ற செப்டம்பா் 9, 10, 11 ஆகிய தேதிகளில்