கடத்தலின் விருப்பம்

Spread the love

தமிழ்

ஒவ்வொரு ஜூன் மாதத்தையும்,
பண்டிகை காலத்தையும்
கவனமுடன் கடக்க விரும்புகிறது
நடுத்தர வர்க்கம்.

ஒவ்வொரு நவம்பர் மாதத்தையும்,
பெருமழைக் காலத்தையும்
கவனமுடன் கடக்க விரும்புகிறது
புறநகரின் குடிசை வர்க்கம்.

ஒவ்வொரு ஜனவரி மாதத்தின்
முதல் வாரத்திலும் சாலைகளைக்
கவனமுடன் கடக்க விரும்புகிறது
அரசு எந்திரம்.


iamthamizh@gmail.com

Series Navigationநான் பிறந்து வளர்ந்த கிராமம் தெம்மூர்திண்ணையின் இலக்கியத் தடம்-13