கடற்கரைச் சிற்பங்கள்

Spread the love

ஜி.ஜே. தமிழ்ச்செல்வி

image

வடிக்கப் படுகின்றன

நவீன சிற்பங்கள் கடற்கரையில்,

பிரம்மனின் படைப்பு

இலக்கணத்தை

வெற்றி கண்டதாக !

 

பிஞ்சு விரல்களின்

மண் பூச்சுக்களில்

வர்ணம் தீட்டிக் கொள்ள

முற்படும் மனங்கள்

அத்தனையும்!

 

சுற்றுப்புறம்

ஸ்தம்பிக்கக் கூடும்

அழகியலாய் வடிக்கப்படும்

கற்பனைக் கவிதை களுக்காக !

 

ஒரு மலையைக்

கட்டியெழுப்ப

மழலை விரல்களுக் குத்தான்

ஆகாய பெலன் !

கட்டிய பின் பொங்கிவரும்

குறுஞ் சிரிப்பில்

தோய்ந்து போகிறதே

என் இதயம்.

 

ஏதேனும் ஒரு

மழலையின் இதயம்

பரிதவிக்கக் கூடும்

விரல் ஸ்பரிசித்த

தன் படைப்பு களுக்காக !

தனித்து விடப்பட்ட

சொப்பு களுக்காக !

 

உயிரையும் வதைக்கும்

கண்ணீர் துளிகள்

மிச்ச மிருக்கலாம்,

மழலையை கடந்து விட்ட

நமக்குள்ளும்

மழலையாய்

அப்போதைய நினைவுகள் !

Series Navigation