கடவுள் டெம்போரல் லோபில் வருகிறார் 7

ஐரோப்பாவில் கிறிஸ்துவம் கேள்விக்கு அப்பாற்ப்பட்டதாக இருந்த காலத்தில் இது போன்ற டெம்போரல் லோப் வலிப்பு நோய் பெற்றவர்கள் என்ன விதமான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளார்கள் என்று ஆராய்வது இன்னும் சில சுவாரஸ்யமான சிந்தனைகளை நமக்கு தரும்.

கிறிஸ்துவ இறையியலாளர்களாக இப்படிப்பட்டவர்கள் பலர் அடையாளப்படுத்தப்பட்டாலும் இவற்றில் சில முக்கியமானவர்களை இங்கே அணுகலாம்.


செயிண்ட் பிர்கிட்டா (1303-1373) ஸ்வீடனின் முக்கியமான செயிண்டாக அறியப்படுகிறார். இவர் சிறுமியாக இருந்த காலத்திலிருந்தே இப்படிப்பட்ட காட்சிகளை அனுபவிப்பவராக இருந்தார். இவரது கல்லறையில் மண்டையோடு ஆராயப்பட்டிருக்கிறது. அதில் இவருக்கும் மெனிஞ்சியோமா என்ற வியாதி இருப்பது தெரியவருகிறது. இது வலிப்புகளை உருவாக்கும் வியாதி. ஆனால், இது டெம்போரல் லோபுக்கு பரவாமல் இருந்தாலும் அதிலும் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கலாம். காட்சி பிரமைகளும் தானாக உருவாக்கிக்கொண்ட psychogenic non-epileptic seizures, or a combination இருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.

கிறிஸ்து பிறப்பு என்று வரையப்படும் படங்களின் முன்மாதிரி இவர் விவரித்ததே. இயேசு தரையில் படுத்துகொண்டு ஒளி பிரகாசித்துகொண்டு இருப்பதையும், கன்னி மேரி தங்கநிற (ஸ்வீடன் மக்களைப் போல) முடி கொண்டவராக இருப்பதாகவும் இவரே விவரித்து உள்ளார். சுவரில் ஒரே ஒரு மெழுகுவர்த்தி இருப்பது, இயேசுவின் தந்தையான கடவுள் மேலே இருப்பது ஆகியவற்றையும் இவரே விவரித்துள்ளார். இயேசு எத்தனை அடிகள் வாங்கினார் என்று அறிந்துகொள்ள விடாமல் பிரார்த்தனை செய்ததாகவும், இயேசுவே இவரிடம் காட்சி அளித்து 5480 அடிகள் வாங்கியதாகவும் கூறுகிறார். இந்த அடிகளை பெருமைப்படுத்த அவர் சொல்லிக்கொடுக்கும் பிரார்த்தனையை சொல்லவேண்டும் என்று கூறினாராம். இயேசு இவரிடம் கொடுத்ததாக இவர் கூறும் பிரார்த்தனை Fifteen O’s என்று அழைக்கபடுகிறது.

ஜோன் ஆஃப் ஆர்க் (Joan of Arc அல்லது The Maid of Orléans) என்று அழைக்க்ப்படும் புகழ்பெற்ற பிரஞ்சு வீராங்கனையும் இது போல அடிக்கடி காட்சிகளை பிரமையாக கண்டவர் என்று கூறப்படுகிறது.

இங்கிலாந்துக்கும் பிரான்சுக்கும் நட்ந்த நூறாண்டு போரில் பிரான்ஸ் வெற்றி அடைவதற்காக இவர் போரிட்டிருக்கிறார். இங்கிலாந்தின் ஆதிக்கத்திடமிருந்து எவ்வாறு பிரான்ஸை விடுவிப்பது என்பது குறித்து கடவுள் இவருக்கு காட்சி அளித்து அறிவுரைகள் கூறியதாக இவர் கூறிக்கொண்டார். சார்லஸ் 7 அரசர் பிரான்ஸின் மன்னராக முடிசூட்டிக்கொள்வதில் இவரது பங்கு பெரும்பான்மையாக இருந்தது. இவருக்கு தனது 12 ஆவது வயதில் 1424இல் இறைக்காட்சிகள் தோன்ற ஆரம்பித்தன என்று கூறியிருக்கிறார். இந்த காட்சிகளில் செயிண்ட் மைக்கேல், செயிண்ட் கேதரீன், செயிண்ட் மார்கரட் போன்றோர் தோன்ரினர் என்று கூறுகிறார். அந்த காட்சிகள் நீங்கும்போது அவற்றின் உன்னதமான அழகு தன்னை அழச்செய்ததாகவும் கூறுகிறார். பதினாறு வயதில் பலரது எதிர்ப்புகளையும் மீறி ஆர்லியன்ஸ் நகருக்கு அருகே ராணுவத்தலைமை ஏற்று மாபெரும் வெற்றி பெற்றார்.
அதன் பின்னர் தொடர்ந்த வெற்றிகளுக்கு பின்னர் சாம்பியன் நகருக்கு சென்று போரிட்டபோது சிறை பிடிக்கப்பட்டார். பிரான்ஸ் அரசு அவரை கண்டுகொள்ளவில்லை. இங்கிலாந்துக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு கிறிஸ்துவ மதகுருக்களால் கிறிஸ்துவத்துக்கு புறம்பான கருத்துக்களை பிரச்சாரம் செய்ததாக விசாரணை செய்யப்பட்டு 19 ஆவது வயதில் தீயில் வைத்து கொல்லப்பட்டார்.

தற்போதைய கத்தோலிக்கர்களால் பெரிதும் கொண்டாடப்படுகிறார். அதுவும் பிரஞ்சு கிறிஸ்துவர்களால். மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் இவருக்கு டெம்போரல் லோப் வலிப்பு இருந்தது என்று கூறுகிறார்கள்.

அவில்லாவின் செயிண்ட் தெரஸா Saint Teresa of Ávila, also called Saint Teresa of Jesus, baptized as Teresa Sánchez de Cepeda y Ahumada, (March 28, 1515 – October 4, 1582) இவர் ஸ்பெயினில் பிறந்தார். மிகச்சிறிய வயதிலேயே நோய்வாய்ப்பட்ட இவர் Tercer abecedario espiritual,” translated as the Third Spiritual Alphabet (published in 1527 and written by Francisco de Osuna) என்ற புத்தகத்தை படிக்கும்போதெல்லாம் காட்சிகளையும் பிரமைகளையும் அடைந்தார். இப்படிப்பட்ட காட்சிகளின் போது பேரானந்தத்தையும் அதீதமான அழகை பார்த்ததால் பெருகும் கண்ணீரையும் அனுபவித்ததாக எழுதுகிறார்.

ஆனால், கத்தோலிக்க போதனைகளுக்குப் பிறகு முதல்பாவத்தையும், மனிதர்கள் எப்போதுமே பாவத்தில் உழல்வதையும் போதிக்கப்பட்ட பின்னால், இந்த காட்சிகள் எல்லாம் தனது பாவத்தினாலேயே வருவதாக கருதிகொண்டு, தன்னைத்தானே கடுமையாக வருத்திக்கொண்டு தனது பாவத்தை போக்க முனைந்தார். அதன் பின்னால், ஒரு பாதிரியார் இவரது பிரமைகள் உண்மையிலேயே இறைவனால்தான் அனுப்பப்பட்டதாக உறுதி கூறியபின்னால், தன்னிடம் இயேசுவே வந்து பேசுவதாக கருதிக்கொள்ள ஆரம்பிக்கிறார். இயேசு வந்ததை இப்படி எழுதுகிறார்
I saw in his hand a long spear of gold, and at the iron’s point there seemed to be a little fire. He appeared to me to be thrusting it at times into my heart, and to pierce my very entrails; when he drew it out, he seemed to draw them out also, and to leave me all on fire with a great love of God. The pain was so great, that it made me moan; and yet so surpassing was the sweetness of this excessive pain, that I could not wish to be rid of it…
இவர் ஏராளமாக தனது அனுபவங்களை எழுதியுள்ளார். இவரது சுயசரிதையில் பிரார்த்தனையின் நான்கு நிலைப்பாடுகளை பற்றி எழுதியிருக்கிறார்.

அடிக்கடி தலைவலி வருதல், மனப்பிரமைகள், அவ்வப்போது பிரக்ஞை இழந்து கிடப்பது, நான்கு நாட்கள் கோமாவில் கிடந்தது ஆகியவையும், ஏராளமான எழுத்தும், மிகவும் விவரிப்பு கொண்ட பிரமை பற்றிய எழுத்துக்களும் இவருக்கும் டெம்போரல் லோப் எபிலப்ஸி இருந்ததை உறுதி செய்கின்றன.

இவர்கள் ஆரம்பத்திலேயே தனியான மதம் ஒன்றை ஆரம்பிப்பதற்கான சூழ்நிலையில் இல்லை. இவர்களது மத அனுபவங்கள் அந்தந்த காலத்திலும் பிறகும் நிறுவனமான கத்தோலிக்க மதத்தால், ஏற்றுகொள்ளப்பட்டிருக்கின்றன. இவர்கள் ஒருவேளை கத்தோலிக்க மதத்தால் புறக்கணிக்கப்பட்டிருந்தாலோ, அல்லது இவர்களை புனிதர்களாக ஏற்றுகொண்டவர்களை மற்ற கத்தோலிக்கர்கள் ஒதுக்கி வைத்திருந்தாலோ, இவர்கள் ஒருவேளை தனி மதத்தை உருவாக்கியவர்களாக அறியப்பட்டிருக்கலாம்.

Series Navigationஜெயமோகனின் அறம் – ஒரு பார்வை