காற்றின்மரணம்


 

வல்லிய நரம்பசைவில்

சேதமுற்று அழும்

பெருங்குரல்-பறையடித்த

அதிர்வை உள்வாங்கி

புடைக்கும் காயத்தின் கதறல்

சுதந்திரத்தைப் பறித்து

ஒரு குழலுக்குள்

அடிமைப்பட்டு அழும் ஆழம்

பெரும் நுகர்தலின்

களிப்பில் சாலைக்கரிமக்

கரைகளைச் செரித்து

மூச்சுக்குழாய் வழி

நுரையீரல் ஆலை சென்று

முகத்தில் கரிமத்தைப்

பூசிக்கொள்கிற நிமிடமென

மரணத்தின் ஓலத்தை ஓயாது

சுமந்து கொண்டு

பயணிக்கிறது காற்று.

சோமா (sgsomu@yahoo.co.in)
Series Navigationமடிப்பாக்கம் மனை தேடி, மாட்டு வண்டியில்மேடம் மோனிகாவின் வேடம் (Mrs. Warren’s Profession) நான்கு அங்க நாடகம் (இரண்டாம் அங்கம்) அங்கம் -2 பாகம் -5