கிளைகளின் கதை

Spread the love

பிரபு கிருஷ்ணா 

நெடுஞ்சாலையில் ஐம்பது வருடங்களாக

நின்டிருந்து இன்று

வெட்டப்பட்ட அந்த புளியமரத்தின்

கிளைகள் ஒவ்வொன்றும்

தன் நினைவுகளை

பகிர ஆரம்பித்தன

தழைகளை கடித்த ஆடுகள்

கல்லெறிந்த கார்த்திக் சிறுவன்

காதல் பேசிய சரவணன் துர்கா

அழுது தீர்த்த செல்லம்மா

திருடியதை புதைத்த கதிரவன்

பிள்ளை பெற்ற லட்சுமி

என எல்லா கிளைகளும்

தங்கள் நினைவுகளை சொன்ன பிறகு

மிச்சமிருந்த

கடைசி கிளை

எதுவும் சொல்லவில்லை

அநேகமாய் அது

வெட்டியவனின் பெயரை அறிந்திருக்கும்

– பிரபு கிருஷ்ணா

Series Navigationபொம்மலாட்டம்ஜோதிர்லதா கிரிஜாவின் நந்தவனத்து நறுமலர்கள் – 1