குப்பைத்தொட்டியாய்

பிச்சினிக்காடு இளங்கோ
1
அட்சயபாத்திரம்
அள்ள ஏதுமற்ற
வெற்றுப்பாத்திரமாய்…

கொட்டிச் சிரித்ததுபோய்
வற்றி வதங்கி
ஈரமில்லா அருவியாய்…

கிளைகளில்லாத
மரங்களாய்
இலைகளற்ற
கிளைகளாய்
பச்சையமில்லா
இலைகளாய் நிரம்பிய வனமாய்…

மலர்களின் இடத்தை
முட்கள் அபகரித்துக்கொண்டன

வெளிச்சத்தின் தளத்தை
இருள் கவ்விக்கொண்டது

கரையவேண்டியது
இறுகிப்போனது

உதிரும் கனிகளின்றி
கசக்கும் காய்களோடு நிரந்தரமாய்…

சிரிக்காமல்
மணக்காமல்
நாறிக்கொண்டிருக்கிறது
குப்பைத்தொட்டியாய்

Series Navigationகனவுதாகம்