குறி மூன்றாவது இதழ் – ஒரு பார்வை

இரு மாத இதழான குறி பற்றி ஏற்கனவே எழுதியிருக்கிறேன். அடுத்த இதழ் பிராம்ப்ட்டாக வந்து விட்டது.
பச்சை நிறத்தில் சிகப்பு எழுத்துக்களுடன் அட்டையே அசத்துகிறது. தனியாக நீல பார்டரில் படைப்பாளிகளின் பெயர்கள். சபாஷ். கலைந்த கூந்தலுடன் கூடிய பெண்ணின் கோட்டோவியம் ( வரைந்தவர் ஜீவா ) எடுப்பாக இருக்கிறது.
தேடி எடுத்த கதை பகுதியில் சோ. தர்மனின் ‘அஹிம்சை’ வந்திருக்கிறது. மைனா வளர்த்து அது இறந்து போக பைத்தியம் பிடித்தவர் போலாகும் அய்யா, கிளிக்குஞ்சு கிடைத்தவுடன் நார்மலாகிறார். அதுவும் இறந்து போக, வெறியனாகி, தவளை மீது கல்லெறியும் சிறுவர்களுடன் சண்டைக்குப் போகிறார். கடைசியில் நாய்க்குட்டி ஒன்று வளர்க்க ஆரம்பிக்கும்போது கதை முடிகிறது. இடையில் திருட்டு, சந்தேகக்கேஸ், போலீஸ் சித்திரவதை என்று கொஞ்சம் பை பாஸில் போகிறது கதை. எப்போதோ எழுதிய கதை. இதற்கு நாம் என்ன சொல்ல..
திருக்குறள் மூலம் பௌத்தத்தையும் அதன் நெறிகளையும் சுட்டுகிறார் விச்சலன் ஒரு கட்டுரையில். நிறைய கவிதைகள். தெரிந்த பெயர்கள் வண்ணை சிவா, ஆங்கரை பைரவி, நா.விச்வநாதன், திலகபாமா.
அறிமுக எழுத்தாளர் ந.ராஜாவின் ‘ சென்னை டு கோரமங்களா ‘ ஒரு பயணக்கட்டுரை போல இருக்கிறது. சில வசனங்களும் வர்ணனைகளும், வாசிப்பின் மூலம் இவர் தேறக் கூடும் என்று நம்பிக்கை தருகிறது.
46 பக்கங்களில் முழுமையாக அச்சிட்டு ஒரு இதழ் கொண்டு வருவது பகீரதப் பிரத்யனம் தான். மண்கண்டனுக்கு அது சாத்தியமாகி இருக்கிறது. வாழ்த்துக்கள்.

0
தனி இதழ் ரூ. 10. ஆண்டுக்கு ரூ . 100. தொடர்புக்கு: 99761 22445.

0

Series Navigationகவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) தெறித்த முத்துக்கள் ! (கவிதை -59)சிற்றிதழ் அறிமுகம் – ‘ நீலநிலா ‘