குழந்தை

Spread the love

அதியன் ஆறுமுகம்
…………………………………..

சின்னவன் காதைப்
பெரியவன் திருக
சின்னவன் நறுக்கென
அண்ணனைக் கிள்ள
வீட்டின் முற்றத்தில் நாட்டப்பட்டது
மூன்றாம் உலகப் போருக்கான
அடிக்கல்!

நெற்றியில் வழியும்
வியர்வை நீரைச்
சேலை முந்தானையில் துடைத்தப்படி
சமையற்கட்டிலிருந்து
சமாதான புறாவாக அம்மா பறந்துவர
முகத்தில் அனல் தெறிக்க
இருவரும் விலகிச் சென்றனர்.

சற்று நேரத்திற்குப் பின்….

அதே முற்றத்தில்
தம் விளையாட்டைத் தொடங்கினர்
அக்குழந்தைகள் இருவரும்!

…………………………………………………..

அதியன் ஆறுமுகம்.

Series Navigationமலேசியத் தமிழ் எழுத்தாளர் இலக்கியச் செம்மல் ரெ.கார்த்திகேசு