கூடடையும் பறவை

Spread the love

 

ஒவ்வொரு அந்தியிலும் 

பறந்து களைத்த பறவை

கூடடைவதைப் போல

தனிமை வந்தமர்கிறது

என் கிளைகளில்

மொழிகள் மறுதலித்த

அடர் மௌன வனத்தின்

ஒற்றை மரமாய்

கிளைகள் பரப்பி நான்.

சில்வண்டுகளின் ரீங்காரமோ

காற்றின் சிலும்பலோ

இலைகளின் நடனமோ

ஏதுமற்ற பேரமைதியில் வனம்.

-வருணன்

Series Navigationயார் அந்த தேவதை!சிதறல்