சத்தியத்தின் நிறம்

Spread the love

 

 

குமரி எஸ். நீலகண்டன்

எரி தணலில்

எஞ்சிய கரியை

கரைத்தேன் கரைத்தேன்

சுவரில் காந்தியை

வரைந்து….

உண்மை மக்களின்

பார்வையில் உறையட்டும்

என்று..

 

காந்தி சிகப்பாக

தெரிந்தார்

தணல் இன்னமும்

கரியில் கனன்று

கொண்டே இருந்தது.

 

குமரி எஸ். நீலகண்டன்

punarthan@gmail.com

 

 

Series Navigationபடியில் பயணம் நொடியில் மரணம்பொன்னியின் செல்வன் : படித்தது அல்ல ,  பார்த்தது ! தலைமுறை தாண்டியும் பேசப்படும் வரலாற்றுப் புனைவு !!