சிற்றிதழ் அறிமுகம் – ‘ நீலநிலா ‘

Spread the love

எட்டாம் ஆண்டு சிறப்பிதழாக இதழ் எண் 23 மலர்ந்திருக்கிறது. ஒரு பக்கம் தாண்டாத இலக்கிய இதழ் இது. இதழே ஒரு பக்கம் தான் என்று எண்ணி விடாதீர் கள். எந்த ஒரு படைப்பும் ஒரு பக்கத்துக்குள்ளே இருக்க வேண்டும் என்பது வரையறை.
வெள்ளைத் தாளில் 24 பக்கங்கள் கொண்ட இதழ். ஒரே ஒரு விளம்பரம் மட்டும் உள் அட்டையில். விருதுநகரிலிருந்து ஜெ. விஜயலட்சுமியை ஆசிரியராகக் கொண்டு வெளிவரும் இதழ் என்றாலும், முழுமையாக பின்னாலிருக்கும் சூத்திர தாரி செண்பகராஜன்.
முக்கால் பக்க தலையங்கம் ( மீதி இடம் இதழ் விவரங்களுக்கு ), இரண்டு பக்கங் களுக்கு பல்வேறு சாதனையாளர்களைப் பற்றி புகைப்படங்களுடன் செய்தி, ஒரு பக்கத்துக்கு ‘ பவுனு பாட்டி ‘ என்று ஒரு சிறுகதை, நிறைய துளிப்பாக்கள், கவிதை கள், மூன்று பக்கங்களுக்கு(!) ஒரு நேர்காணல். நூல் அறிமுகம், நூல் நயம், அறிவிப்புகள், வாசகர் எண்ணங்கள் என முடிகிறது இதழ்.
ஒரே விளம்பரம் என்றாலும், இரண்டு இடங்களில் இரு நூலாசிரியர்களின் தொகுப்பு கள் பற்றிய விவரமும், விலையும், கிடைக்குமிடமும் அதனை விளம்பரம் என்றே எண்ண வைக்கின்றன.
கனமான படைப்புகள் ஏதும் இல்லையெனினும், தொடர்ந்த இலக்கிய முயற்சி பாராட்டப்பட வேண்டியதே.
தொடர்புக்கு:
நீலநிலா செண்பகராஜன், 23, க.யி.ச. கிட்டங்கி தெரு, விருதுநகர் – 626 001.
செல் : 94880 01251.

0

Series Navigationகுறி மூன்றாவது இதழ் – ஒரு பார்வைவளவ.துரையனின் நேர்காணல்