“சுயம்(பு)”

” ஸ்ரீ: ”

அரும்பு விரல்கள்
அத்தனையும் ஆரஞ்சுச் சுளை
பஞ்சைவிட மெத்துமெத்து உள்ளங்கால்
உற்சவ விக்கிரகம் போல்
உள்ளமைதி காட்டும் கண்ணிமைகள்
பிரும்ம ரகசியத்தை உள்வைத்து மறைத்தது போல
மூடிக்கிடக்கும் உள்ளங்கைகள்
சென்ற ஜென்மத்து ஓட்டத்திற்கு
இந்த ஜென்மத்திலும் தொடரும் ஓய்வு போல
ஓயாத தூக்கம்
புதுக்குழந்தை அவதாரம்
அன்னையவள் ஓய்ந்துபோய்ப் படுத்திருக்க
“அப்பாவைப் போலிருக்கான்”
“இல்லையில்லை அம்மா ஜாடை”
“அட நம்ம சுப்புத்தாத்தா மூக்கு….” என்று
சுற்றி நின்ற உறவுகள் ஒப்பீடு செய்ய
பிஞ்சு புத்தனைப் போன்று
அரைக்கண் விழித்த குழந்தை
வெள்ளரி இதழ் திறந்து சொன்னது….
“நான் என்னைப் போலவே இருப்பேன்….!”


மின்னஞ்சல் முகவரி : sriduraiwriter@gmail.com

Series Navigationவள்ளுவர் காட்டும் மனிதர்கள் 1. மர(ம் போன்ற) மனிதர்கள்துறைமுகம், தேடல் நாவல்களில் நெய்தல் நில மக்களின் வாழ்வியல்