தாகூரின் கீதப் பாமாலை – 24 பாமாலைக் கழுத்தணி உனக்கு !

மூலம் : இரவீந்தரநாத் தாகூர்
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

கவினுறச் செய்துன்னைக்
கவர்ந்து கொள்ளேன் !
காதல் வலையால் உன்னைக்
கவர்ந்து கொள்வேன் !
கதவைத் திறப்பது உனக்கென்
கையல்ல ! எனது
கானங்கள் தான் உனக்கு
கதவைத் திறக்கும் !

கழுத்து முழுதும் நகை
உனக்கு
குவித்திட மாட்டேன் !
பூமாலைப் பூத்தோரணம்
உனக்குப்
பூண மாட்டேன் !
என் பரிவுப் பண்பை எல்லாம்
ஒரு மாலையில் பின்னி
உன் கழுத்தணி செய்வேன் !

எவருக்கும் தெரியாது
இதயத்தில் அலைகள் எழுப்பும்
எத்திசைப் புயலுக்கு
நர்த்தனம் ஆடுமென்று ?
நிலவின் புலப்படா ஈர்ப்பால்
எழும் அலைகளின்
ஏற்ற இறக்கக் கொந்தளிப்பை.
ஏற்படுத்துவேன்.

+++++++++++++++++++++++++
பாட்டு : 90 தாகூர் தன் 49 ஆம் வயதில் “ராஜா” என்னும் பாட்டு நாடகத்தில் ஒரு பாகமாக எழுதியது (டிசம்பர் 1910).
+++++++++++++++++++++++++

Source

1. Of Love, Nature and Devotion Selected Songs of Rabindranath Tagore Oxford University Press, Translated from Bengali & Introduced By : Kalpana Bardhan
2. A Tagore Testament,
Translated From Bengali By Indu Dutt
Jaico Publishing House (1989)
121 Mahatma Gandhi Road,
Mombai : 400023

*********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] July 23, 2012

Series Navigationபாரதியும் பட்டுக்கோட்டையாரும்(பகுதி-12)ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 30) மீண்டும் நினைக்கும் போது