திண்ணைப் பேச்சு – புத்தகங்களிற்கு எதிரான போர்

This entry is part 27 of 32 in the series 1 ஜூலை 2012

இஸ்மத் சுக்தாய் எழுதிய ஒரு கட்டுரையினை ராகவன் தம்பி இந்த வாரம் அளித்துள்ளார். எப்படி இஸ்மத் சுக்தாய் எழுதிய ஒரு கதைக்காக அவர் மீது வழக்க்குத் தொடரப் பட்டது என்றும் அவர் அதனை எதிர்கொண்டது எப்படி என்றும் முன்னமே மலர் மன்னன் ஒரு முறை சுக்தாய் வரலாற்றை எழுதியவர்களின் கட்டுரையிலிருந்து மொழியாக்கம் செய்து அளித்துள்ளார்.

http://www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20708232&format=html

ராகவன் தம்பியின் மொழியாக்கம் நேரடியாக இஸ்மத் சுக்தாய் வார்த்தைகளிலேயே வெளியாகிறது.

புத்தகத்திற்கு எதிரான போர் என்பது எல்லாக் காலங்களிலும் கருத்துகளை அடக்கவும், ஒழுங்கை நிலைநாட்டுவது என்ற பெயரில் ஒடுக்குமுறையை ஏவி விடவும் பயன்படு வருகிறது. மதவாதமும் அந்த அடக்குமுறையின் ஓர் அங்கமானால் கேட்கவே வேண்டாம்.

இஸ்மத் சுக்தாய் ஒரு காலகட்டத்தின் வெளிப்பாடு. சுதந்திரப் போராட்டத்தின் காலகட்டத்தில் எழுந்த சுதந்திர தாகத்தில் தம்மை ஒன்று படுத்திக் கொண்ட ஆக்க சக்திகளின் ஓர் அங்கம் இஸ்மத் சுக்தாய். இந்திய சுதந்திரப் போராட்டத்தின் மிக முக்கியமான கருத்துப் பரவல் அகிம்சையின் போராட்ட குணம் என்பது எல்லோருக்கும் வெளிப்படையாய்த் தெரியும் ஓர் அம்சம். ஆனால் வெகுவாக சர்ச்சிக்கப் படாத இன்னொரு விஷயம் பெண்களின் பங்கு பற்றியது. அகிம்ஸை போராட்டத்தின் ஆணிவேரே பெண்மையின் அணுகுமுறையிலிருந்து பெறப்பட்ட சத்தியாக்கிரக வழிமுறை என்று கமலாதேவி சட்டோபாத்தியாயாவும், குளோரியா ஸ்டீனமும் கூறுவர்.

 

பெண்கள் மிக இயல்பாக தம்மை சுதந்திரப் போராட்டத்தில் இணைத்துக் கொண்டதன் காரணம் மகாத்மா காந்தி என்பதும் , மற்ற சுதந்திரப் போராட்டங்களுடன் ஒப்பீடு செய்யும் போது இது எவ்வளவு உண்மையான புரட்சிகரமானது என்பது சரியாகப் பதிவு செய்யப் படவில்லை. குரதுலைன் கைதர், மகாதேவி வர்மா, இஸ்மத் சுக்தாய் என்று இலக்கியத்தில் இது பதிவு பெற்றது.

இஸ்மத் சுக்தாய் வாழ்ந்தபோது எப்படியெல்லாம் விவாதத்திற்கு உட்பட்டாரோ, இறப்பின் போதும் அதே விதமாக விவாதத்திற்கு ஆளானார். தாம் மரித்தபின்பு தம் உடலை எரிக்க வேண்டும் என்று உயில் எழுதி வைத்து விட்டார். வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி என்றாலும் சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க அவர் விரும்பவில்லை.

———

Series Navigationமணமான அந்தப் பெண்களின் பெயரில்…ஒரு வெளிர் நீல நிறப் புள்ளி : பூமி மீது ஓர் அன்னியப் பார்வை
author

கோபால் ராஜாராம்

Similar Posts

2 Comments

  1. Avatar
    மலர்மன்னன் says:

    ராகவன் தம்பியின் மொழியாக்கக்ம் மிகச் சிறப்பாக உள்ளது. கோபால் ராஜாராம் மிகச் சரியாகவே அவதானித்திருப்பதுபோல் எனது எழுத்து இஸ்மத் சுக்தாயை வாசகர்களுக்கு அறிமுகம் செய்வதாக இருந்தது.
    -மலர்மன்னன்

  2. Avatar
    பா. ரெங்கதுரை says:

    கோபால் ராஜாராம் இக்கட்டுரையை விரிவாக எழுதியிருக்க வேண்டும். துணுக்குச் செய்தி போல தோற்றம் தருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *