தீ, பந்தம்

 

 

வெவ்வேறு புள்ளிகளில்

பல்வேறு மனிதர்

அவர் பரிமாற்றங்கள்

விளைவாய்

என் பயணங்கள்

 

பயணங்களின் போது

ஒரு வாகனத்துள்

மறு நேரங்களில்

இருப்பிடமாகும்

அடைப்பு

 

ஊர்தி உறைவிடம்

உடனாய்த் தென்படுதல் பற்றா?

 

இடம் பொருள்

சகஜீவி

எதனோடாவது தென்பட்டவன்

இழப்பை மரணத்தை

கடந்து செல்ல வில்லையா?

அது பற்றறுந்து மேற்செல்தல்

ஆகாதா?

 

ஒன்றாயிருத்தல் தென்படுதல்

தற்காலிகம் என்ற​ புரிதல்

நிகழாவிடினும்

நிரந்தரமின்மை எட்டு திக்கிலும்

 

எதையாவது

பற்றிக்கொண்டே

தீ

தென்படும்

 

சத்யானந்தன்

Series Navigation“வானுயர்ந்து எழுந்துள்ள கட்டிடங்களின் அத்திவாரக்கற்கள் வெளியுலகிற்கு தெரிவதில்லை. “திரை விமர்சனம் ஸ்பெக்டர்