நான் யாழினி, ஐ.ஏ.எஸ். அத்தியாயம் -11

This entry is part 9 of 23 in the series 21 ஜூன் 2015

ஜி.ஜே. தமிழ்ச்செல்வி

சாத்தனூர் அணை செல்லும் சாலை! சொர்ப்பனந்தல் என்ற அழகான ஊரின் அரசினர் உயர்நிலைப் பள்ளியின் எதிர்சாரியில் அமைந்திருந்தது. அந்த அறக்கட்டளை கிராமத்திலேயே உயர்ந்த அடுக்குமாடிக் கட்டிடங்களைக் கொண்டிருந்தது.
அங்கு சிறுவர்களுக்கு இலவசக் கல்வியும், அனைத்து மதப் புத்தகங்களும் போதிக்கப்பட்டது. மாற்றுத்திறனாளிகளுக்கான தொழிற்கல்வியும், தொழிலும் வழங்கப்பட்டது. அங்கு ஐ.ஏ.எஸ் அகாடமியும் இருந்தது யாழினியை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. ஒரு கிராமத்தில் தன்நிறைவு பெற்ற நிறுவனமா என்று வியந்துபோனாள். அதன் நிறுவனரான மிஸ்.சோஃபியா சராசரிக்கும் சற்று உயரமானவளாய் இருந்தார். கழுத்தில் மஞ்சள் அழுத்தமாய் பூசப்பட்ட தாலி. நெற்றி நிறைய அகலமாய்க்குங்கும்ப் பொட்டு அது வகிடிலும் சிரித்தது. சோஃபியா என்ற பெயரைக் கேட்டு ஒரு வேளை ரோமன் கத்தோலிக்காக இருக்குமோ என்றெண்ணினாள் யாழினி.
அறைக்கு வெளியில் இருந்த பெண்ணிடம் அறக்காவலரைப் பார்க்க வேண்டும் என்று கூற தானே அறங்காவலர் என்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அங்கு ஒரு கன்னியாஸ்திரியையோ ஒரு விதவையையோ அல்லவெனில் ஒரு பிரம்மக்குமாரியையோ எதிர்பார்த்தாள் யாழினி. இங்கோ மங்களகரமான ஒரு கிராமத்து வாசி வந்து நிற்க என்னவோ போல் இருந்தது,
விநோதன் மற்றும் தேவகியின் பெயர்களை கேட்டதும் ஒரு விநோத பார்வைப் பார்த்தவள். அப்படி ஒரு குழந்தை இங்கு இல்லவே இல்லை என்று அழுத்தம்திருத்தமாய் கூறியதும் யாழினி குழம்பிப்போனாள்.
விநோதனுக்காகத்தான் இவ்வளவு தூரம் வந்தது. அவன் இல்லை என்றதும் மனம் சலிப்புற்றது. எந்த பிடிப்பும் இல்லாமல் யாருக்கா வாழ வேண்டும். எல்லோரும்பிறக்கிறார்கள் எல்லோரும் மரிக்கத்தான் போகிறார்கள். எதற்காக இந்த வாழ்க்கை என்றெண்ணம் ஓட! பிறப்பிற்கும் இறப்பிற்கும் நடுவிலான வாழ்தல் அனுபவத்தைமேற்கொள்ளும் விதமே வாழக்கை என்று யாருக்கோ விளக்கிக்கொண்டிருந்தாள் சோஃபியா.
உடன் வரும் உறவுகள் அவரவர் காலம் வரையே நம்மோடு பயணிக்க இயலும் அவர்கள் காலம் எங்கே நின்றுவிடுகிறதோ, அவர்கள் அங்கே அஸ்தமித்து விடுவார்கள்,நம் காலம் அஸ்தமிக்கும் வரை நாமோ ஓடிக்கொண்டுதான் இருக்க வேண்டும்.
யாழினிக்கு மிகச் சோர்வாய் வந்தது. டேவிட்டிற்கு போன் செய்தாள் நாட் ரீச்சபுள், ராஜம் பாட்டியின் எண்ணோ சுவிட்ச்டு ஆஃப் என்று வந்தது. ஏன் ஒருவரும் தனக்குபோன் செய்யவில்லை என்று குழம்பினாள்.
கை பையை அங்கேயே மறந்துவிட்டவள் ஊருக்குப் பஸ் ஏற புளிய மரத்தடியில் வந்து நின்றாள்.
யாழினி யாழினி என்றழைத்தபடி சோஃபியா வந்தாள்
யாழினி தானே உங்க பெயர்
ஆமாம்
உங்கள ஐ.ஏ.எஸ் அகாடமியில சேர்த்து விட்டிருக்காங்க
யாரு ?
லண்டன்ல இருந்து
யாரு டேவிட்டா ?
இல்லேம்மா யாருன்னு பெயர் சொல்லல, ஆனா ஒரு வருடத்திற்கான பீஸ் முழுக்க கட்டியிருக்காங்க, வாங்க என்று அழைத்தாள்.
சில நாட்களாய் அவள் வாழ்க்கையில் வந்துக்கொண்டிருந்த திடீர் திருப்பங்களை யாழினியால் தாங்கிக்கொள்ள முடிவில்லை. குழப்பமும், பதிலற்ற கேள்விகளும்தொடர்ந்து வந்துக்கொண்டிருந்தது, டேவிட் திருப்பத்தூரி்ல் இருந்துகொண்டு ஏன் லண்டன் என்று சொல்ல வேண்டும்.
அங்கே நிறைய பெண்கள் இருந்தார்கள். சிரிக்க சிரிக்கப் பேசினார்கள். அனைவரும் படிக்கவே விரும்பினார்கள். ஒவ்வொரு பெண்ணிற்குள்ளும் ஒரு வித்தியாசவாழ்வனுபவம் இருந்தது.
வேலைக்கு சென்றுவிட்டு வந்த ரோகிணி சளித்துக்கொண்டாள். என்ன கவர்ண்மெண்ட் உத்தியோகம் பார்த்து என்ன செய்ய, மேலதிகாரி ஆம்பிள்ளைன்னா பல்லஇளிக்கனும், நமக்கு கீழ அவன்னா, பொட்டச்சி கீழ வேலைப்பாக்கனுமானு எகத்தாளம் பேசுவானுங்க என்று முறுமுறுத்தாள்.
யாழினிக்கு வாழ்க்கைக் குறித்த எந்த விடையும் தெரியவில்லை. குழப்பம் தரும் கேள்விகளையும் எண்ணங்களையும் ஒதுக்கிப் படித்தாள், படித்தாள் படித்தாள் மீண்டும் படித்துக்கொண்டே இருந்தாள்.
அவளின் வாழ்வாதாரம், காதல் கணவன், குழந்தைபற்றிய அனைத்தும் படிப்பாகவே மாறியது. சின்ன சின்ன அபிலாஷைகளும் ஆசைகளும் கொண்ட அவளின் மனச் சக்கரம்படிப்பையே அச்சாணியாகக் கொண்டு சுழன்றது.

[தொடரும்]

Series Navigation“உன் கனவு என்ன?” – ரஸ்கின் பாண்ட்சீப்பு
author

ஜி. ஜே. தமிழ்ச்செல்வி

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *