நித்ய சைதன்யா – கவிதை

Spread the love

நித்ய சைதன்யா

1.வெறும் நகரம்

எதிர்கொண்டழைக்க யாருமற்ற

நகரத்தின் சாலைகளில்

எங்கும் இல்லை மண்வாசம்

தேவதைகள் வாழும் அறைகளற்று

தாள்சிக்கிக் கிடக்கிறது நகரத்தின் வாசல்கள்

தெருக்கள்தோறும் தெய்வங்கள்

வெறித்து நிற்கின்றன

உக்கிரம் தகிக்கும் கொடைகள் ஏங்கி

பேய்கள் சுமக்கும் மரங்களற்றும்

இசக்கிகள் வாழும் வனங்களற்றும்

வெம்பரப்பாய் விரிந்துள்ளது நகரத்தின் வீதிகள்

பலர்கூடி வாழும் இந்நகரத்தின் ஓர் இளிப்பு

என்னை வெறியேற்றிக் கொண்டே இருக்கிறது.

பா.சங்கரநாராயணன் (நித்ய சைதன்யா)

தாமிரபரணி நகர் விக்கிரமசிங்கபுரம் திருநெல்வேலி

7418425626

 

 

Series Navigationஅய்யனார் கதைதொடுவானம் 97. பிறந்த மண்