பண்டமாற்று

ARAVINDHAN BOOK
பத்மநாபபுரம் அரவிந்தன் 
 
குளம் நோக்கி 
வேரிறக்கி வளருகின்ற மரம் 
மர நிழலில்  தனையொதுக்கி
இளைப்பாறும் குளம் ..
 
பழம் தின்று விதையோடு 
எச்சமிடும் பறவை 
விதை விழுந்து மரமாக 
கூடு கட்டும் அதனில்..
 
மழை நீரால் பெருக்கெடுத்து 
ஓடுகின்ற ஆறு 
கடல் சேர்ந்து மேகமாகி 
மழையாக  மாறும் .. 
Series Navigationபொன்னியின் செல்வன் படக்கதை 5