பாண்டித்துரை கவிதைகள்

1.
ஒரு
குறிப்பு எழுதும் நேரத்தில்
அவநிதா
எழுதி வைத்த கவிதைகளை
வரைந்து விடுகிறாள்
அந்த நாளின் கவிதை
ஓவியமாக
சிரித்துக் கொண்டிருக்கிறது

2.

யாரேனத் தெரிந்தும்
பலிபீடம் நோக்கி
தலை சிலுப்பச் செல்லும் ஆடு
குருதி படியும் நிலங்களுக்காக
தனை வெட்டக் கொடுக்கிறது

3.
உடைந்து அழும்
பொம்மையிடம்
பேசிக்கொண்டிருக்கிறாள்
அம்மா
ஒட்டப்பட்ட
பொம்மையாக
கேட்டுக்கொண்டிருக்கிறாள்
அவநிதா

Series Navigationமீண்டும் இமையத்துடன் ஒரு சந்திப்புதொடு நல் வாடை