பாற்சிப்பிகள்

 

 

சேகரிக்க வேண்டாம், கரையில் மின்னும்

மென்மையான பாற்சிப்பிகளை

உப்புச் சுவை மா கடலுக்கே அவை சொந்தமானவை

ஏன் தண்ணீரில் இறங்குவதில்லை

அச்சமா???

 

எண்ணிலடங்கா ரகசியங்கள் இல்லை கடலிடம்

இருப்பது ஒற்றைச் சிறு ரகசியமே…

எல்லையில் வானும் கடலும்

இணையாதென்பது குறித்து நன்கறிந்தும்

ஏன் பொய்யான கனவுக் கவிதைகள்

கரையிலிருந்து கொண்டு கடல் குறித்து?

 

சேகரிக்க வேண்டாம் இப் பாற்சிப்பிகளை

கடலுக்குள் இறங்காமல்

கரையில் சுகமாக இருந்துகொண்டு…

 

– இஸுரு சாமர சோமவீர

தமிழில் – எம்.ரிஷான் ஷெரீப்,

இலங்கை

Series Navigationதாகூரின் கீதப் பாமாலை – 26 உறக்கத்தில் தவறிய காட்சி !பி.வி.பிரசாதின் “ எப்படி மனசுக்குள் வந்தாய்”