புதிய பழமை

Spread the love

எதுவும் புதிதல்ல.
சூ¡¢யன் சொடுக்கும்
காலச் சுழற்சியில்
பழையன எல்லாம்
புதிதாய்த் திரும்பும்.
பெருவெளியில் பொதிந்த
வேதமும் நாதமும்
கழிக்க முடியாத
பழையன தானே!
கழிதல் என்பது
கணிதத்தின் சாயல்.
காலக் கணக்கில்
மனிதன் கழிவதும்
மனிதக் கணக்கில்
காலம் கழிவதும்
பழையன அன்றிப்
புதியன அல்ல.
நீயும் நானும்
காலத்தின் குழந்தைகள்
தொன்மையின் தன்மையில்
விளைந்த விருட்சங்கள்.
ஞாபகப் புதர்களில்
மறைந்ததாய்த் தோன்றி
மீண்டும் துளிர்த்த
பழைய உறவுகள்.
புதிதாய் எதுவும் வருவது இல்லை
வருவது யாவும் புதிய பழமையே!

ரமணி

Series Navigationபுன்னகையை விற்பவளின் கதைஅந்தப் பாடம்