புளியம்பழம்

Spread the love

ஓட்டோடு ஒட்டாத
கனியிடம் கேட்டேன்
‘ஒட்டியிருந்தால்
உறவு இனிக்குமே’

கனி சிரித்தது
பின் உரைத்தது

‘கனி நான் கவிஞன்
இந்த ஓடு என் ரசிகை
நான் வானம்
அவள் பூமி
எங்களுக்குள்
பார்வையுண்டு
பிரமிப்புண்டு
தியானம் உண்டு
தீண்டல் இல்லை

ஒட்டக்கூடாததில்
மனத்தை ஒட்டாதே என்று
உதடொட்டாமல்
சொன்னான் வள்ளுவன்

‘யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் இலன்’

இந்த வானம்
அந்த பூமியைத் தீண்டினால்
கற்பிழப்பது
என் கவிதைகள் மட்டுமல்ல
நானும்தான்’

அமீதாம்மாள்

Series Navigationசெட்டிநாடு கோழி குழம்புஇயற்கையிடம் கேட்டேன்