பேரழகி

உயிர் பிரியும்

இறுதி வினாடியில்

நினைத்துப் பார்க்கிறேன்

வாழ்ந்திருக்கலாமே என்று

விடை பெறும் தருணத்தில்

தவறவிட்டு விட்டேன்

வழியனுப்பி விட்டு

திரும்பி இருக்கலாம்

மதுப் புட்டியில்

மயங்கி விழுந்தேன்

புதுப் புது கவிதைளோடு

பிறகு எழுந்தேன்

போதைியில் அமிழ்ந்தால் தான்

எழுதுகோலில் மை

கரைகிறது

நதியில்

நீந்துவதெல்லாம்

கவிதையோடு

கரை சேர்வதற்காகத்தான்

கற்பனைக்காக

கடிவாளத்தை கழற்றிய போது

துகிலுரித்துக் காட்டினாள்

அரசிளங்குமரி

சுயம்வரத்தில் தோற்றால் என்ன

விளக்கை அணைத்தால்

படுக்கை விரிப்பும்

பஞ்சு மெத்தை தான்

அடுக்களைக் கூட

அந்தப்புரம் தான்

எல்லோரும்

மகாராணிகள் தான்.

Series Navigation‘இசை’ கவிதைகள் ‘உறுமீன்களற்ற நதி’ தொகுப்பை முன் வைத்து…ஒரு செடியின் கதை