மயிலிறகு

Spread the love

பூங்காவின் சாயம் திப்பிய கிருஷ்ணன்

நெற்றியில் கட்டிய ஒற்றை மயிலிறகு

ஒரு மாறுவேடப்போட்டியில்

சிலையாக நிற்கவைத்தது குழந்தையை.

அசைந்து ஓடிக்கொண்டிருக்கும் அவனை

ஐந்து நிமிடங்கள் அசைவற்ற சிலையாக்கிய

பெருமைக்குள்ளானதாக அது

ஊர் ஊராக புத்தகங்கள் மத்தியில்

பயணப்பட்டுக்கொண்டிருந்தது.

அவனுக்குக் குழந்தைகள் வந்தும்

அது முதுமையடையவில்லை.

ஆட்டமும் பாட்டும் மறந்து

அசைவற்ற குழந்தைகள்

தொலைக்காட்சி முன்னிருக்க

கோடைச் சந்தையில்

புழுக்கத்தோடு விசிறியபடி

கூவிக்கூவி விற்றுக் கொண்டிருந்தார்கள்

மயிலிறகு விசிறியை.

Series Navigation