மிம்பர்படியில் தோழர்

ஹெச்.ஜி.ரசூல்

கட்சித்தலைவர்களும் தொண்டர்களும்
கம்யூனிஸ்ட் கட்சி அலுவலக் கூட்ட அரங்கில்
ஸப்புகளில் வரிசையாய் அணிவகுக்க
இருபத்துமூன்று ஆண்டுகளுக்கு முன்பு இறந்துபோன
ஹாமீம் ஆலிம்சா இமாமாக நின்று
நேற்றைய தொழுகையை நடத்திக் கொண்டிருந்தார்
அலைமோதிய மனம்
பதைப்புக் கொள்ளத் துவங்கியபோது
ஜும்மாமசூதியின்
கடைசிவரிசையில் நானிருந்தேன்
மிம்பர்படியில் கையிலொரு வாளோடு
நூற்றுக்கணக்கில் குழுமியிருந்த
தொழுகையாளிகளிடம்
தோழர் நல்லக்கண்ணு
மார்க்ஸிய வகுப்பு எடுத்துக் கொண்டிருந்தார்

Series Navigationகூடங்குளம் மின்சக்தி ஆலையம்ஒரு படைப்பாளியின்வலியை தன்வலியாய் உணர்ந்து எழுதிய எழுத்து