முரண்களால் நிறைந்த வாழ்க்கை

Spread the love

 

 

அமுதாராம்

புகை நமக்குப் பகை

புண்பட புண்பட புகைத்துக்கொண்டிருக்கிறோம்

குடி குடியைக் கெடுக்கும்

மொடாக்குடியன்களாக மாறிக்கொண்டிருக்கிறோம்

பெண்கள் நாட்டின் கண்கள்

பச்சைக்குழந்தையென்றும் பாராமல் பலாத்காரம் செய்துகொண்டிருக்கிறோம்

இலஞ்சம் தவிர் நெஞ்சம் நிமிர்

எல்லா வேலைகளுக்கும் இலஞ்சத்தை வாரியிறைத்துக் கொண்டிருக்கின்றோம்

தூய்மை இந்தியா

சாதி மதம் இன பேதம் பாராட்டி

முதலாளித்துவ ஊழல் அரசியலால்

அசுத்தப்படுத்திக் கொண்டிருக்கின்றோம்.

முரண்கள் அழகுதான்

இவை?

 

 

Series Navigationஅழியாச் சித்திரங்கள்சுத்த ஜாதகங்கள்