மெல்பனில் தமிழ் மொழி உரைநடை தொடர்பான கலந்துரையாடல்

தமிழ் மொழி – கல்வியில், ஊடகத்தில், படைப்பிலக்கியத்தில் எவ்வாறு உருமாற்றம் அடைகிறது – ஆசிரியர்கள், பத்திரிகையாளர்கள், இலக்கியப்படைப்பாளிகளிடத்தில் தமிழ்மொழி உரைநடையில் நிகழும் மாற்றங்கள் தொடர்பான விரிவான கலந்துரையாடல் விக்ரோரியா மாநிலத்தில் மெல்பனில் MORWELL என்னும் இடத்தில் அமைந்துள்ள திறந்த வெளிப்பூங்காவில் நடைபெற ஏற்பாடாகியுள்ளது.
தற்பொழுது கோடை விடுமுறை காலம் என்பதனால் தமிழ் கற்பிக்கும் ஆசிரியர்கள், ஊடகங்களில் எழுதும் பேசும் – ஊடகவியலாளர்கள், மற்றும் படைப்பிலக்கியவாதிகளின் கருத்துக்கள் சங்கமிக்கும் கலந்துரையாடலாக வெளிஅரங்கில் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள இந்நிகழ்ச்சி எதிர்வரும் 24-01-2015 சனிக்கிழமை முற்பகல் 11 மணிக்கு MORWELL என்னுமிடத்தில் திறந்தவெளிப்பூங்காவில் நடைபெறவுள்ளது.
இந்நிகழ்ச்சியில் இலங்கையின் மூத்த இலக்கிய விமர்சகரும் ரூபவாஹினி ஒளிபரப்பு கூட்டுத்தாபனத்தின் தமிழ் ஒளிபரப்பு சேவையின் முன்னாள் பணிப்பாளரும் வீரகேசரி பத்திரிகையின் முன்னாள் செய்தி ஆசிரியருமான திரு. வன்னியகுலம் உரையாற்றுவார். அவரது உரையைத்தொடர்ந்து கலந்துரையாடல் இடம்பெறும்.
திரு. வன்னியகுலம், ஈழத்து புனைகதைகளிற் பேச்சு வழக்கு, புனைகதை இலக்கிய விமர்சனம் ஆகிய நூல்களின் ஆசிரியராவார்.
—0—

Series Navigationஹாங்காங் இலக்கிய வட்டக் கூட்டம்ஆனந்த பவன் : 22 நாடகம் காட்சி-22