ரகசியங்கள்

Spread the love

 

  • சேயோன் யாழ்வேந்தன்

ஆண் பெண் அவரவர்க்கான ரகசியங்களில்

பொதுத் தன்மைகள் இருக்கின்றன.

ஆண்களின் ரகசியங்களில்

அதிக வேறுபாடுகள் இல்லை.

மறைக்கப்பட்டிருக்கும் பெண் ரகசியங்களை

மனக்கண்ணில் பார்த்துவிடுகிறார்கள் ஆண்கள்.

கணவன் மனைவியிடமும்

மனைவி கணவனிடமும்

மறைக்கும் ரகசியங்கள்

இல்லறத்தைவிடப் புனிதமானவை.

தன் ரகசியங்களைச்

சட்டைகளில் எழுதிவைத்திருக்கும்

பைத்தியங்களைப் பார்த்திருக்கிறேன்.

என் ரகசியங்கள்
என்னை அறிந்திடாத வண்ணம்

எனக்குள் ஒளிந்துகொள்கிறேன்.

குழந்தைகள் உங்கள் காதோரம்

கிசுகிசுக்கும் ரகசியங்கள்

ஒரு புதிய உலகத்தை உருவாக்க வல்லவை!

seyonyazhvaendhan@gmail.com

Series Navigationஎழுபதில் என் வாழ்க்கைபொக்கிஷங்கள் – எஸ். ராமகிருஷ்ணன், திலகவதி ஐபிஎஸ். அம்பை பங்கேற்ற முற்றம் நிகழ்வு