வடமொழிக்கு இடம் அளி

 
image.png
 
 
 
 
சி. ஜெயபாரதன், கனடா
 
 
நாலாயிரம் ஆண்டுகட்கு
மேலாய்
ஓர் மறை நூலாய்,
வேர்விட்டு
விழுதுகள் தாங்கி 
ஆல மரமாய்க் கிளைவிட்டு,
 
பைந்தமிழ் தவிர,
பாரத மொழிகளின் 
ஓரரிய 
தாய்மொழி யாய்,
பாலூட்டி
மேலும் தாலாட்டி,
ஞாலப் பேறு பெற்று   
பேரறிஞர்
சீர்மொழியாய்,
சிந்தையில்
செழித்து வாழ்ந்த 
உன்னத
இந்திய மொழி,
இமய மொழி !
வேத வியாசக ருக்கு 
கீதை
ஓதிய தேவ மொழி !
வால்மீகிக்கு
சீதா தேவி நேரே 
கூறிய 
இராம காவியம் 
காளிதாசரின் படைப்பு
மேக தூதகம் !
புத்தருக்கு ஞான
வித்திட்ட
போதி மொழி !
செம்மொழி யாய் 
மின்னிய 
பொன்மொழி,
பூர்வ மொழியை
சீர்கெட்ட மொழியென
பேர் பெற்ற
மேதையர் கூறும் பேதமை
கேளீர் ! கேளீர் !
கேளீர் !
 
===============
Series Navigationஇந்தியாவின் பிரமாஸ் வான்வெளி நிறுவகம் லக்னோவில் ஓர் உற்பத்தி தொழிற்சாலை நிறுவத் திட்டம்.சிறுவர் இலக்கிய கர்த்தா துரைசிங்கம் விடைபெற்றார்