வட்டத்துக்குள்

திருமணம்

மாலை மாற்றும் காட்சி

புலனத்தில்

இடைவெளிக் கொள்கை

இவர்களுக்கில்லை

சுற்றம் சூழ வராதிருந்து

வாழ்த்துவோம்

பெண்குழந்தை

இன்று உதயம்

புலனத்தில் காணுங்கள்

புதுமலரை

வராதிருந்து வாழ்த்துங்கள்

கழகத்தின்

ஆண்டுக்கூட்டம்

ஆண்டுக் கணக்கு

மின்னஞ்சலில்

மலர்களாகத் தொடர்வோம்

மாலையாதல் வேண்டாம்

அட

இறந்துவிட்டாரா?

இருக்கும்  இடத்தில்

அழுவோம்

ஊருக்குள் சிறையா?

சிறைக்குள் ஊரா?

நீ அங்கே நான் இங்கே

கவலையில்லை

தொற்று தொடாது

தொலைபேசியை

வையம் ஆள்பவரும்

வட்டத்துக்குள்.

Series Navigationவாழ்க்கைபெண்கள் பெண்கள் பெண்கள்