வால்ட் விட்மன் வசனக் கவிதை-58 ஆதாமின் பிள்ளைகள் – 3

author
0 minutes, 4 seconds Read
This entry is part 1 of 27 in the series 19 ஜனவரி 2014

 

  (Children of Adam)

ஒரு மணி நேரப் பித்தும், பூரிப்பும்..!

(One Hour to Madness & Joy)

 

 (1819-1892)

 

மூலம் : வால்ட் விட்மன்
தமிழாக்கம் : சி, ஜெயபாரதன், கனடா

 

        

 

ஒரு மணி நேரத்தில் தெரியும்

எனது பித்தும், பூரிப்பும் !

சீற்றம் அடைவோரே !

சிறைப்படுத் தாதீர் என்னை !

புயல் காற்றில்

என்னை விடுவிப்பது எதுவோ ?

சினப் புயல் இடி மின்னல்

இடையே எனது

சீற்றத்தில் புரிவ தென்ன ?

மற்றோரை விட

மர்ம வெறி மயக்கத்தில்

குடிமூழ்கினேன் !

கடூரக் கனிவு வலிகளே ! அவற்றை

ஒப்படைப்பேன்

என் பிள்ளைகளிடம் !

திருமணத் தம்பதிகளே !

உம்மிடம் நான் சொல்வேன்

ஏனென்று !

நீ யாராயினும்

நானுனக்கு விட்டுக் கொடுப்பது

உலகப் புறக்கணிப்பில் !

நீ எனக்கு அதுபோல்

விட்டுக் கொடுப்பாய் பெண்ணே !

சொர்க்கத்துக்கு

மீட்சி !

உன்னை இழுத்து நான்

அணைத்து

முதன்முறை இதழ் பதிப்பது

முடிவான

ஓர் மனிதன் செய்கை !

 

 

உன் வாயிலிருந்து அடைப்பை

நீக்குவது,

எனக்குப் போது மானது

என்வசம் உள்ளது.

இன்றைய தினத்தில் அது

என் உணர்ச்சி.

நிரூபணம் ஆக வில்லை சில.

மன மயக்கத்தில் சில !

மற்றவர் நங்கூரப் பிடியிலிருந்து

தப்பி நிற்கிறேன்.

பயணத்துக்குச் சுதந்திரம் !

காதலுக்குச் சுதந்திரம் !

விரைவாய்

வாகனம் ஓட்டுவேன்.

அபாயத் துக்கு அஞ்சாமல் !

இடிப்பார் இருந்தும்

அழிவை வரவேற்றுச்

செல்வேன்,

வான் நோக்கி ஏறிப் போவேன்

காதல் உலகுக்கு !

மேலேறுவது

குடிப் பழகிய ஆத்மா வோடு.

மூழ்குவது சுயம் இழக்கும்

மதுக்குடியில் !

வாழ்வுக்கு நான் ஊட்டுவது

ஓரு மணி நேரப்

பூரண விடுதலை எனக்கு,

சுருக்கமாய்

ஒரு மணி நேரப் பித்தும்

பூரிப்பும் சேர்ந்திட !

 

 

+++++++++++++++++

Series Navigationதாயகம் கடந்த தமிழ் – அனைத்துலக மாநாடு ஜனவரி 20, 21, 22, 2014 ஆகிய நாள்களில் கோயம்புத்தூர் என்.ஜி.பி கலை அறிவியல் கல்லூரி வளாகத்தில்கமலா இந்திரஜித் கதைகள்நோ செண்டிமெண்ட்ஸ் மம்மி!முப்பது ஆண்டுகளாகப் பேசவில்லைமருமகளின் மர்மம் – 12நவீன அரபு இலக்கியம் : எச்.பீர்முகமது நூல் அறிமுகம்புகழ் ​பெற்ற ஏ​ழைகள் – 42
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *