வா

Spread the love

உலக மக்கள் தொகை அனைவருக்கும்

செல்போன் கையில் இருந்தாலும்

மன இணைப்பில்லாமல் தன்னுள் சுழல்கிறது தனி உலகம்

“தான்” எனும் செருக்குடன்

சதா

செருமிக் கனைக்கும் உலகம்

பக்கத்து மனிதரை அக்கறையின்றிப் பார்க்கிறது

அடுத்தவர் வலியை அறிய மறுக்கிறது

நிலாவைப் பற்றி

அரசியல் பற்றி

முல்லையாறு பங்கீடு பற்றி

இன்னும்பலப்பல கோடி வெளிஉலகச்சங்கதிகள் பேசி

தன் உள்சத்தம் மறைக்க

வெளிச்சத்தம் போட்டு அலைகிறது!

Series Navigationவாழவைக்கும்[ஆ!]ஓவியக்கலை! (ஓவியர் தர்மேஷ் குறித்த ஒரு சிறு அறிமுகம்)பிறைகாணல்