விசையின் பரவல்


ஊடலின் தொடக்கம்
இனிதே ஆரம்பமானது
உன் சொல்லாலும்
என் செயலாலும் .
மனதின்
கனமேற்றும் நிகழ்வுகள்
எல்லையற்று நீள்கிறது .
என் கண்களின்
சாட்சியாகி
நிற்கிறது
உன் சொற்கள் .
நீர்மம் குமிழாக
உருவெடுக்க
விசையின் பரவல்
முந்தி சென்று
சொல்லி விடுகின்றன
அதிர்வலையின்
செய்திகளை .
உருமாற்றங்களின்
உருவகம்
விலகல் தீர்மானத்தில்
பழித்து கொண்டிருக்கிறது .
-வளத்தூர் .தி .ராஜேஷ் .
Series Navigationஅம்மாவின் நடிகைத் தோழிஆனியன் தோசை