விரிசல்

Spread the love

 

 

முனைவா் சி. இரகு

 

 

 

ஒவ்வொரு நாளும்

முள்ளின் மீது

நடந்தபொழுதெல்லாம்

வலியில்லைஆனால்

இப்பொழுது

வலிக்கின்றது

பிரிவினை வாதம்

உறவுகளுக்குக்கொடுக்கும்

உயா;ந்த பட்டம்

ஏமாற்றுக்காரன்.

 

நியாங்களும்

தருமங்களும்

காலத்திற்கு

ஏற்றார்போல்

மனிதா;கள்

மாற்றுகின்றார்கள்

எப்பொழுதும்

சமத்துவ மனநிலை

இல்லாதவா;கள்.

 

இருவாpன்

உறவுகளில்

விரிசல்கள்

மூன்றாம் நபாpன்

குறுக்கீடுகள்.

 

எப்பொழுது

ஒரு நிகழ்வு

மறைக்கப்படுகின்றதோ

அப்பொழுதுதே

அநீதி

தலையெடுக்கின்றது.

 

நேரிய கண்ணோட்டம்

இல்லையென்றால்

பிரித்தாளுபவர்கள்

விளையாடுவார்கள்

வாழ்க்கையில்.

 

சுயசிந்தனையோடு

செயல்படுங்கள்

பின்னணியில்

இயக்குபவா;களின்

சூழ்ச்சியை

புhpந்துகொள்ளுங்கள்

இல்லையென்றால்

வாழ்க்கை

பாலைவனம்.

 

எதிரிகளின்

சூழ்ச்சி

தந்திரம்

கொஞ்சம்

கொஞ்சமாய்

மனநிலையில்

மாற்றத்தை

விதைப்பார்கள்

பின்னாளில்

தாக்குவார்கள்

பிறகு

குரங்காட்டி

பொம்மையாய்

ஆட்டிவைப்பார்கள்

வாழ்க்கையை

வாழவிடமாட்டா்கள்.

நம்குடுமி

மற்வா்களின்

கையில்.

 

தாயின்

சொல்லைவிட

வலிமையானது

இவ்வுலகில்

எதுவுமில்லை.

தகப்பனின்

போதனையைவிட

இவ்வுலகில்

சிறந்த போதனையில்லை.

 

குடும்பமென்பது

குருவிக்கூடு

அதை கலைக்க

காத்திருக்கும்

தந்திரக்கூட்டம்

உரிய தருணத்தில்

தகா;க்கவேண்டும்.

 

ஒருபெண்

உருவாக்கிய

புனிதமான

குடும்ப உறவுகளை

கலைத்து சிதைத்து

இன்னொரு பெண்

குடும்பமாகலாம்

என்றால்

இறைவனும்

தயங்குவான்..

——

 

Series Navigationதொற்றெனும் பாவி   வலி