விழுது

ஆலமரத்தின் வேர்ப்பகுதி
நீர்நிலையில்
மூழ்கி இருந்தன
அதன் விழுதுகள் கூட
அதனை கைவிட்டுவிட்டன
விருட்சம்
தனக்குக் கீழே எதையும்
வளரவிடாது
புளிய மரத்துப் பேயைப் பற்றி
நிறைய இக்கட்டி
கதை சொல்வாள்
பொரிஉருண்டை அஞ்சம்மாள்
குச்சியை நட்டு வைத்தால் கூட
வேர் பிடித்து விடும்
முருங்கை
ஐந்து வருடம்
காத்திருந்தாள் போதும்
அன்னையைப் போல்
காவந்து பண்ணும்
தென்னை
பனங்கல்லு குடிச்சவனுக்கு
ஏது சாமி
கேட்காமலேயே
நுங்கு கொடுக்கும்
கிராமத்து பூமி.

Series Navigationவால்ட் விட்மன் வசன கவிதை -9 என்னைப் பற்றிய பாடல் -2 (Song of Myself)அக்னிப்பிரவேசம்-21