வெளி ரங்கராஜன் – இரு நூல்கள்

 (`வெளிச்சம் படாத நிகழ்கலைப் படைப்பாளிகள்` தொகுப்புக்கு(அடையாளம் வெளியீடு) பீமா இலக்கிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.ராஜ பாளையத்தில் இயங்கும் பீமராஜா ஜானகிஅம்மாள் அறக்கட்டளை சார்பாக இந்த விருது வழங்கப்படுகிறது.
ரூ.10000/- மதிப்புள்ள இந்த விருது கடந்த மூன்று ஆண்டுகளாக வழங்கப்பட்டு வருகிறது.இந்த விருதை இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ள நிகழ்கலைக் கலைஞர்களுக்கு முக்கியமாக அகாலத்தில் மறைந்த ஒப்பனைக் கலைஞர் வேலாயுதம் அவர்களுக்கு வெளி ரங்கராஜன் அர்ப்பணித்திருக்கிறார்.)
வெளிச்சம் படாத நிகழ்கலைப் படைப்பாளிகள்.
ஆசிரியர்; வெளி ரங்கராஜன்.
நம்மோடு வாழ்ந்து, பல நிகழ்கலைப் படைப்பாளிகள், நமக்கு
தெரியாமலே மறைந்து போனார்கள்.
 நமக்கு இன்று தெரிய வருவதெல்லாம், இன்றைய வணிகம்
நிறைந்த கலை சூழலில், நம் நினைவிற்கு கொண்டு வந்து நிறுத்த,
வெளி ரங்கராஜன், மிகுந்த சிரமங்களுக்கிடையே,
24 படைப்பாளிகளை  வெளியே கொண்டு வந்துள்ளார்..வரலாற்றின் இருண்ட பக்கங்களில் புதையுண்ட
போன நிகழ்கலைப் படைப்பாளிகள் பலர்.
அவர்களில் சிலர் மீதாவது வெளிச்சம் பாய்ச்சம்
முயற்சியே இந்த நூல் என்று வெளிரங்கராஜன் கூறுகின்றார்.

இவர்கள், இந்த மண்ணில் சுயும்புவாக தோன்றியவர்கள்.
நாடகக் கலைஞர் காந்தி மேரியில் ஆரம்பித்து,
கும்பகோணம் பாலாமணி வழியாக ,பலக் கலைஞர்களை
சொல்லி, தெருக்க்கூத்து, தோல்பாவை, பொம்மலாட்டம்,
மேடை நாடக நடிகர்கள், புகைப்பட கலைஞகர்,
கைசிக நாடக பெண்கள் உட்பட, நவீன நாடக
கலைஞர் தஞ்சை ராஜாமாணிக்கம் வரை,
பல்வேறு கலைகஞர்களை பேசும் நூல்.மதுரை லேடி டோக் கல்லூரியில் விரிவுரையாளராக
பணியாற்றித் தம்முடைய லிசெ நாடகப்பள்ளி மூலமாக
குழந்தைகள் நாடக உருவாக்கத்திற்கு சிறப்பான பணியாற்றிய
காந்தி மேரிக்கு, பிரஞ்சு அரசாங்கம்,
செவாலியே விருது வழங்கி கொளரவித்துள்ளது.

தோல்பாவை,கட்ட பொம்மலாட்டம், தெருக்கூத்துக்
கலஞர் அம்மாபேட்டை கணேசன். “விதை தவசம்”,
என்ற ஆவண படத்தை, மிகுந்த சிரமங்களுக்கிடையே
எடுத்துள்ளார். மணல்வீடு அரிகிருஷ்ணன்,
இந்த படத்தை தயாரித்துள்ளார்.

அம்மாபேட்டை கணேசன் கூறுவது போல், பாடுபட்டு வரும்,
எளிய மக்களின் பொழுது போக்கே, இந்த தோல்பாவை
கூத்து, தெருக்கூத்து போன்ற , கலை வெளிப்பாடுகள்தான்.
ராமாயணம் கூத்திலே , ராமன், சூர்ப்பனகை
பார்த்து கூறுகின்றான் ,” உன்ன பக்கம் போட்டு
படுக்க என்னலாகாது தாயே. அந்தாண்ட பக்கம் பாரு,
எங்காளு ஓராளு இருப்பான். அவனுக்குதான் ,
இப்ப, பொண்ட்டாட்டி தேவை.
ஏதோ அவன் பாத்து பண்ணுவான்”
என்று மிகுந்த கூர்மையுடன் வசனம் வருகின்றது.

ஆர்மோனிய, பின்பாட்டு கலஞர் கமலவேணி.

1930களில், மதுரகவி பாஸ்கரதாஸ் அரங்கம்
வழியாக ,எண்ணற்ற அரங்கக் கலைஞகர்கள்
உருவானர்கள். அதில் ஆர்மோனிய,பின்பாட்டு
கலைஞர் கமலவேணியும் ஒருவர்.தன்
இசை பாடல்கள் மூலம், சுதந்திர உணர்வை
நாட்டு மக்களுக்கு ஏற்படுத்தியவர்.

பேராசிரியர் ராமானுஜம் உருவாக்கிய வெறியாட்டம் ,
நாடகத்தில். முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளார்.
ஒப்பாரி பாடல்கள் பின்புலத்தில்,  நிகழ்த்திய நாடகம் இது.
இலங்கை போரை மையமாக வைத்து எழுத்தப்பட்ட நாடகம்

இதற்கு முன்னுரை வழங்கிய சே. ராமானுஜம் ”
நிகழ்த்துக் கலைஞகர்களின் பங்களிப்புகளை நிழலிலிருந்து
வெளிச்சத்திற்குக் கொண்டு வந்த வெளி ரங்கராஜன்
முயற்சி உள்ளத்தைக் கிளர்த்திய அரங்க ஒளித் தளங்கள்” கூறியுள்ளார்.
இதன் ஆசிரியர் வெளி ரங்கராஜன், 10 ஆண்டுக்கும்
மேலாக இலக்கிய- நாடக தளத்தில் தீவிரமாக் இயங்கி
வருபவர். நாடக வெளி என்னும் இதழை
10 ஆண்டுக்கும் மேலாக தொடர்ந்து நடத்தியவர்.
தமிழின் நாடக புதிய முயற்சிகளுக்கு, ஆதரவு காட்டியவர்.
இவர், இன்றும் தொடர்ந்து, பல்வேறு இதழ்களில் ,
நாடகம்- கலை- சினிமா குறித்தும் எழுதி வருபவர்.
அடையாளம் ,இதனை வெளியிட்டுள்ளது, விலை ரூ.100/=
புத்தகங்கள் பார்வைகள் – தொகுபாசிரியர் வெளி ரங்கராஜன்.
அண்மைக்கால நாடகம், சினிமா, சிறுகதை, நாவல், கட்டுரை,
கவிதை ஆகிய பல்துறை நூல்கள் குறித்த
கட்டுரைகளை உள்ளடக்கிய தொகுப்பு.
ந.முத்துசாமியின் நாடகக் கட்டுரைகள், இராமானுஜம்
நாடகங்கள், கீரீஷ் கர்னாடின் நாடகங்கள், பெரியார்
பற்றிய நாடகம், சொல்லப்படாத சினிமா,
நவீன கன்னட சினிமா,சார்லி சாப்ளின் சினிமா
பார்வை, வீணை தனம்மாள் பற்றிய கட்டுரை.
பிரதாப சந்திர விலாசம், 6174 நாவல், சுமார்
எழுத்தாளனும், சூப்பர் ஸ்டாரும் போன்ற
பல்வேறு வகையான கட்டுரைகள் அடங்கிய நூல்.
அண்ணாமலை, முருகபூபதி, பாவண்ணன்,பிரேம்,
ப.திருநாவுக்கரசு, விட்டல் ராவ், அ, ராமாசாமி,
சோழ நாடன், எஸ். ராமகிருஷ்ணன்,
லதா ராமகிருஷ்ணன், இரா.முருகவேள்,
அ. மார்க்ஸ், கவிஞர். வைதீஸ்வரன்,
இந்திரா பார்த்தசாரதி, அஜ்யன் பாலா
போன்ற பல்வேறு சிந்தைனையாளர்களின்
கருத்துக்கள் அடங்கிய தொகுப்பு.ராமானுஜம் நாடகங்களைப்பற்றி அண்ணாமலை
கூறுகையில்,”இந்த நாடகங்கள் வெறும் இலக்கிய
வடிவங்களாக் நின்றுவிடாமல், நிகழ்த்துகலின் அழகியலை
உள்வாங்கி, ஒரு தமிழ் அரங்கிற்கான கட்டமைப்பை கொண்டவை”
என்கிறார்.

சொல்லப்படாத சினிமா பற்றி திருநாவுக்கரசு
எழுதுகையில்,” ஆவண்ப்படங்கள் குறித்த உலகளாவிய
பார்வையிலிருந்து தொடங்கி ஐரோப்பிய மற்றும்
கீழை நாடுகளின் ஆவணப்படங்கள், இந்திய மற்றும்
தழிழ் ஆவணப்படங்கள் எனக் கடந்த 100 ஆண்டுகளில்
எடுக்கப்பட்டுள்ள முக்கியமான ஆவணப் படங்கள்
மற்றும் குறும்படங்களின் தொகுப்பானா இந்நூல்,
ஆவணப்படங்கள் எடுக்க நினைப்பவர்களுக்கு
தகவ்ல்களையும், உத்வேகத்தையும் தருகிகின்றது
என்று கூறுகின்றார்.

சார்லி சாப்ளினை குறித்து மலையாளத்தில்
எழுதிய கட்டுரையை, தமிழில், விட்டல்ராவ்
மொழி பெயர்த்துள்ளார். இதில் ,” சாப்ளின்
சிறுவானாக வறுமையில் வாடி, புறக்கணிப்ப்பு
போன்ற துயரங்களில் இருந்து, கலைக்கான
பாதையை தேர்ந்தெடுத்து, அதன் உச்சாணிக்
கொம்பிற்கே சென்றவர்.

5 வயதிலேயே, நாடக்த்தில் தள்ளப்பட்ட
சாப்ளின் நடையும், அவரது முகபாவனையும்,
மக்களால், பெரிதும் கவரப்பட்டது.

இட்லரை எதிர்த்தும், யுத்தத்தின் வெறுமையை
உணர்த்தியும் எடுக்கப்பட்ட அவரது சினிமா,
நவீன சினிமாவிற்க்கு,சாப்ளின் அழித்த
பெரும் கொடையாகும் என்கின்றார்.

காந்தியின் போரட்ட முறையை, சாப்ளின்
பெரிதும் மதித்தார். அதனாலேயே, அவ்ரது
பலப் படங்கள், இயந்திர வாழ்க்கை முறையை
பெரிதும் கிண்டல் செய்தது.

கடலில் ஒரு துளி என்ற இந்திரா பார்த்தசாரதியின்
கட்டுரைத் தொகுப்பு, வரலாற்று உண்மைகளை
சரிவர நாம் புரிந்துக் கொள்ளும் போது, நம்முடைய
உயிரோட்டமான பண்பாட்டு அடையாளங்களை
புரிந்து கொள்ள முடியும் என்கிறார்.

சுமார் எழுத்தாளனும், சூப்பர் ஸ்டாரும் என்ற கட்டுரை
தொகுப்பை அஜயன் பாலா எழுதியுள்ளார். இதில், ”
சினிமா ஆசையில், தன்னுடைய இருப்பையும் துறந்து,
நிறைய சாதிக்க வேண்டும் எனற கனவோடு,
சென்னையை சுற்றி வரும் எண்ணற்ற
இளைகளின் கனவுகளை இதில் பிரதிபலிக்கின்றார்.கடைசியாக,  மணல் புத்தகம் (இலக்கிய இதழ்) குறித்து,
சண்முக சுந்தரமும், சங்கர ராம சுப்பிரமணியனும் சேர்ந்து
எழுதியள்ள கட்டுரை தொகுப்பு. சிறுப் பத்திரிகைகளின் வரவு
குறைந்து, இடை நிலை பத்திரிகைகள், பெருகி வரும்
தோற்றம், சிறுப்பத்திரிகைகளை, எந்த விதத்திலும்
அழித்து விட முடியாது என்ற எண்ண ஓட்டத்தில்
கட்டுரை செல்கின்றது.

நம்முடை ஆழ்ந்த சிந்தனை ஓட்டத்திலும்,
உயிரோட்டமான தொடர்பு நிலைகளும்,
நம் உத்வேகங்களை இனம் காண உதவும்”
என்கிறார்கள் கட்டுரை ஆசிரியர்கள்.

வெளியீட்டாளர்; டிஸ்கவரி புக் பேலஸ். விலை ; ரூ.100/=

 வெளி ரங்கராஜன், 10 ஆண்டுக்கும் மேலாக
இலக்கிய- நாடக தளத்தில் தீவிரமாக் இயங்கி
வருபவர். நாடக வெளி என்னும் இதழை 10
ஆண்டுக்கும் மேலாக தொடர்ந்து நடத்தியவர்.
தமிழின் நாடக புதிய முயற்சிகளுக்கு, ஆதரவு காட்டியவர்.
இவர், இன்றும் தொடர்ந்து, பல்வேறு இதழ்களில்
,நாடகம்- கலை- சினிமா குறித்தும் எழுதி வருபவர்.
                                                  –    இரா. ஜெயானந்தன்.
Series Navigationமுடிவற்ற போர்: மிதவாத முஸ்லீமாக இருந்தால் மட்டுமே போதாது.Tamil novel Madiyil Neruppu