அஞ்சலி – மலர்மன்னன்

author
1
0 minutes, 0 seconds Read
This entry is part 4 of 31 in the series 10 பெப்ருவரி 2013

ச.திருமலைராஜன்
தங்களுக்குச் சரியென்று படும் கருத்துக்களைத் துணிவாகவும், தெளிவாகவும் சொல்லக் கூடிய இரு பெரும் ஆளுமைகள் இந்த வாரம் மறைந்து விட்டார்கள். இருவரும் எனக்கு இணையம் மூலமாக அறிமுகமாகி நெருக்கமானவர்கள். என் மீது மிகுந்த பிரியத்துடனும் வாஞ்சையுடனும் பழகிய பெரியவர்கள். இந்திய தேசீயத்திற்கும், இந்து மதத்திற்கும், கருத்துச் சுதந்திரத்திற்கும் இவர்கள் இருவரது மறைவும் மாபெரும் இழப்பாகும். ஆம், டோண்டு ராக்வன் மறைவின் பொழுது பெரியவர் மலர்மன்னன் அவர்கள் எனக்குக் கீழ்க்கண்ட மடலை இரு தினங்களுக்கு முன்பாக அனுப்பியிருந்தார். அதில் அவர் சொன்னது

”பிறந்துவிட்ட எவரும் ஒரு சந்தர்ப்பத்தில் மரணம் அடைந்தே தீர வேண்டும். அது சாசுவதமானது. தமது
பணியைச் சரியாகச் செய்து முடித்த பிறகே நம்மிடமிருந்து விடை பெற்றிருக்கிறார். நாமும் அவருக்கு
நல்லமுறையில் விடைகொடுப்போம்”

ஆம் அதையே நாம் மலர்மன்னன் அவர்களுக்கும் செய்ய வேண்டும். ஒரு பத்திரிகையாளராக, கால் என்னும் இலக்கிய இதழின் ஆசிரியராக, இலக்கியவாதியாக, பேச்சாளராக, தொண்டராக, இந்த்துத்துவ அரசியலின் களம் இறங்கி செயல் பட்ட ஒரு துணிவான வீரராக,ஒரு அமைப்பாளராக பன்முகங்களிலும் தொடர்ந்து செயல் பட்டு தன் கடமைகளை முழுமையாகச் செயல் படுத்தி விட்டு விடை பெற்றிருக்கிறார் மலர் மன்னன் அவர்கள். தமிழ் இணையம் வந்த பிறகு அதன் மூலமாக தன் கருத்துக்களை பல்லாயிரக்கணக்கான தமிழர்களிடம் கொண்டு சென்ற ஒரு சிறந்த சிந்தனையாளர் மலர்மன்னன். ஆனந்த விகடனில் பரிசு பெற்ற சிறுகதைகளும், நாவல்களும் எழுதியுள்ளார் மலர்மன்னன். அவரது ஆரிய சமாஜம், தி மு க உருவாகியது ஏன்? நாயகன் பாரதி, வந்தே மாதரம் ஆகிய நூல்கள் முக்கியமானவை. திண்ணை இணைய இதழ் மூலமாகவும், தன் நூல்கள் மூலமாகவும் திராவிட இயக்கங்களின் பொய் முகங்களைக் கிழித்தவர் மலர்மன்னன். வஹாபி இஸ்லாமின் பயங்கரவாத முகத்தைத் தொடர்ந்து விமர்சித்து எச்சரித்து வந்தவர். தமிழக சமூக, அரசியலைப் புரிந்து கொள்ள விரும்பும் எந்தவொரு மாணவருக்கும் அவரது நூல்கள் உறுதுணையாக இருக்கும். மலர்மன்னன், டோண்டு ராக்வன் போன்ற பன்முக ஆளுமை படைத்த அறிஞர்களை இனி அரிதாகவே தமிழ் சூழலில் காண முடியும்.

மிகத் தீவீரமான கருத்துடையவர் என்பதினால் பலருக்கும் அவரிடம் ஒரு வித அச்சம் இருந்திருக்கலாம். அவர் மீது பலருக்கும் கடுமையான விமர்சனங்கள் இருக்கலாம். ஆனால் எந்த நிலையிலும் கண்ணியத்தையும், பண்பையும் மரியாதையையும் தவற விடாத ஒரு பண்பாளர். அன்னாருடைய மறைவுக்கு எனது ஆழ்ந்த அஞ்சலிகள். அவரது மகளுக்கும் குடும்பத்தாருக்கும் எனது அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

வருத்தத்துடன்
ச.திருமலைராஜன்

——————————————————————————————
மலர்மன்னன் டோண்டு ராகவன் மறைவிற்காக இரு தினங்களுக்கு முன்பாக எனக்கு அனுப்பிய மடல்
———————————————–
சிறிதும் எதிர்பார்க்கவில்லை. நான் சந்தித்ததோ பழகியதோ இல்லை. ஆனாலும் அவரை அறியும்
வாய்ப்பினைப் பெற்றேன். மிகவும் துணிவுடன் களத்தில் நின்று சளைக்காமல் தமது கருத்தை நிறுவப்
போராடியவர். அது இணைய தளமாகத்தான் இருக்கட்டுமே! அதற்கும் துணிச்சல் வேண்டித்தானே
இருக்கிறது! எத்தனை கேலி கிண்டல் இழிவுகளையும் துடைத்துப் போட்டு நிற்பவர் என்று அறிவேன்.
மகர நெடுங்குழைக் காதர் அவரைப் பார்த்துக்கொள்வார்.
நான் ஆனந்த விகடன் போன்ற இதழ்களில் எழுதிக்கொண்டிருந்தபோதே என்னுடைய தீவிர வாசகர்களீல்
ஒருவராக இருந்தவரை இழந்துவிட்டேன்.
பிறந்துவிட்ட எவரும் ஒரு சந்தர்ப்பத்தில் மரணம் அடைந்தே தீர வேண்டும். அது சாசுவதமானது. தமது
பணியைச் சரியாகச் செய்து முடித்த பிறகே நம்மிடமிருந்து விடை பெற்றிருக்கிறார். நாமும் அவருக்கு விடை கொடுப்போம்
அன்புடன்,
மலர்மன்னன்

Series Navigationமலர்மன்னனுடன் சில நாட்கள்‘நான் ரசித்த முன்னுரைகளிலிருந்து………..16 இந்திரா பார்த்தசாரதி – ‘வேதபுரத்து வியாபாரிகள்’.
author

Similar Posts

Comments

  1. Avatar
    smitha says:

    I am shocked to hear that Mr.Malarmannan is no more. This is an irrepairable loss.

    My deepest condolences.

    May his soul rest in peace.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *