அவுஸ்திரேலியாவில் அனைத்துலகப் பெண்கள் தின விழா

author
0 minutes, 2 seconds Read
This entry is part 6 of 16 in the series 6 மார்ச் 2016

 

ஐந்து அரங்குகள் ஒன்றுகூடும் அமர்வுகளில் பெண்ணிய கருத்தியல்களின் சங்கமம்

தமிழினியின் ஒரு கூர்வாளின் நிழலில் நூல் அறிமுகம்

அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கம் எதிர்வரும் 6 ஆம் திகதி (06-03-2016) ஞாயிற்றுக்கிழமை மெல்பனில் நடத்தவிருக்கும் அனைத்துலகப்பெண்கள் தின விழாவில் கவியரங்கு, விவாதஅரங்கு, கருத்தரங்கு, கலையரங்கு, மறைந்த பெண்ணிய படைப்பாளிகள் இருவரின் நினைவரங்கு மற்றும் தமிழினியின் சுயசரிதையான ஒரு கூர்வாளின் நிழலில் நூலின் அறிமுகம் என்பன இடம்பெறவுள்ளன.

சங்கத்தின் துணைச்செயலாளர் திருமதி சாந்தினி புவனேந்திரராஜா நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளராக இயங்கும் அனைத்துலகப்பெண்கள் தின விழா, சங்கத்தின் தலைவர் பேராசிரியர் ஆசி. கந்தராஜாவின் தலைமையில் 6 ஆம் திகதி மெல்பனில் பிரஸ்டன் நகர மண்டபத்தில் மாலை 3.30 மணிக்கு ஆரம்பமாகும்.

நிகழ்ச்சிகளை  திரு, திருமதி கணநாதன் தம்பதியர் மங்கள விளக்கேற்றி    தொடக்கிவைப்பார்கள்.    திருமதி சகுந்தலா கணநாதன்  ஆங்கிலத்தில்  படைப்பு இலக்கியம் எழுதும் எழுத்தாளர் என்பது குறிப்பிடத்தகுந்தது.

திருவாளர்கள் அ. நாகராஜா, சந்திரசேகரம் ஆகியோரின் தமிழ்ப்பெண் வாழ்த்து, தமிழ்த்தாய் நடனம் என்பனவற்றுடன் அரங்குகள் ஆரம்பமாகும்.

கவிஞர் கல்லோடைக்கரன்  தலைமையில் இவர்களின் பார்வையில் பெண்  என்ற தலைப்பில் நடைபெறும் கவியரங்கில், அறவேந்தன், வெள்ளையன் தங்கையன், நந்தகுமார் இராமலிங்கம், சகீம் மாத்தயஸ், கேதா ஆகியோர் பங்குபற்றுவர்.

ரேணுகா சிவகுமாரனின் தலைமையில்  ” தமிழ்ப்பெண்கள் இங்கு முழுமையான சுதந்திரத்துடன் வாழ்கிறார்களா ? ” என்ற தலைப்பில்  புஷ்பா ஜெயபாலசிங்கம், நந்தினி சிவராஜன், புஷ்பா சிவபாலன், கௌசல்யா ஜெயேந்திரா ஆகியோர் பங்குபற்றுவர்.

திருமதி சாந்தினி புவனேந்திரராஜா தலைமையில் நடைபெறும் கருத்தரங்கில்  கீத்தா மாணிக்கவாசகம்,  லலித்தா  செல்லையா, சகீம் மாத்தயஸ், இந்திராணி  ஜயவர்த்னா,    நிரஞ்சனா  நவரட்ணராஜா, ஆகியோர்  உரையாற்றுவர்.

அண்மையில் மறைந்த பெண்ணியவாதிகளான எழுத்தாளர்கள் அருண். விஜயராணி, தமிழினி சிவகாமி ஆகியோர் நினைவு அரங்கும்  ஒழுங்குசெய்யப்பட்டுள்ளது.

இந்நினைவரங்கில் அருண். விஜயராணி குறித்து சகுந்தலா பரம்சோதிநாதனும் தமிழினி சிவகாமி தொடர்பாக தெய்வீகன் பஞ்சலிங்கமும் நினைவுரை  நிகழ்த்துவர்.

அண்மையில்  வெளியான தமிழினியின் சுயசரிதை ( தமிழ்நாடு காலச்சுவடு வெளியீடு) ஒரு கூர்வாளின் நிழலில் நூல் பற்றிய அறிமுகமும்  இந்நினைவுரையில்  இணைந்திருக்கும்.

கலையரங்கில்  அசோகவனத்தில்  கண்ணகி என்னும் பெண்ணியச்சிந்தனையை தூண்டும்  வித்தியாசமான நாடகம் அரங்கேற்றப்படும்.

ஜீவிதா  விவேகானந்தன்,  தமிழ்பொடியன்,  நிருத்தன்  சுந்தரசிவம், பிரவீணா சந்திரநாயகம்,  லாவண்யா  அறிவழகன் ஆகியோர் நடிக்கும் இந்நாடகத்தின் கதை  அமைப்பு: ஜே,கே.

மாலதி முருகபூபதியின் நன்றியுரையுடன் அனைத்துலகப்பெண்கள் தினவிழா  நிறைவுபெறும்.

atlas25012016@gmail.com

—-0—-

Series Navigationதங்கம் மூர்த்தி கவிதைகள் — ஒரு பார்வை ‘ என் பண்டிகையின் நாட்குறிப்பிலிருந்து … ‘ தொகுப்பை முன் வைத்து …தொடுவானம் 110. தமிழகத்தில் திராவிட ஆட்சி.
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *