ஆத்ம கீதங்கள் – 9 முறிந்த உன் வாக்குறுதி .. !  

This entry is part 9 of 23 in the series 14 டிசம்பர் 2014

ஆங்கில மூலம் : எலிஸபெத் பிரௌனிங்

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

 

 

நதியோரம் நின்றேன் நாமிருவர் நின்ற பூமியில் !

நீரோட் டத்தில் கருநிழல் காட்சி நினைவு !

வழக்க மாய்க் கடந்து செலும் பாதை அது.

ஒருத்தர் தடம் மட்டும் பனிப்புல் பதிக்க,

வருத்த நிலை எனக்கு, அன்று முதல் !

 

பலவகைப் பூக்கள் கரையோரம் காணலாம்

தலை குனியா தெதுவும் நான் பறித்து கொள்ள !

ஆலமரப் பறவை நீண்டு பாடும் ஓசை யோடு !

மெதுவாய் அழும் என்குரல் பாட்டை முறிக்காது,

அந்த நாள் சொன்ன உன் வாக்குறுதி !

 

நதி ஓரம் நின்றேன்; உன் வாக்குறுதி நினைவு ;

வாக்கு முறித்தவன் நீ ! பொறுத்தேன் நான் பூமிபோல்;

பூக்கள் வளர விட்டேன்; புள்ளினம் பாட விட்டேன்;

இனியனே ! அவர்க்கிடர் தராது னக்குத் தருவேனா ?

எனது காதலன் நீ அந்த நாள் !

 

என்னாசை அன்பனே ! போ, மன்னிப்புன் மோசடிக்கு !

வழிபடு, ஆசிபெறு, தேவர்கள் வாழ்த்துனது வெற்றிக்கு !  

வாளுறை காட்டும் வாளின் நீளம் ! என் துயர் கவசம்

வாழ்வின் மௌனம், வருத்தம் மிக்கது மரிப்பை விட !

போய்விடு அழித்து விட்டு அந்த நாளை !

 

++++++++++++++++++++

Series Navigationஜன்னல் கம்பிகள்பூவுலகு பெற்றவரம்….!
jeyabharathan

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *