இனிய தமிழ் கட்டுரைகள் ஆசிரியர் மணிமாலா மதியழகன் , சிங்கப்பூர்

This entry is part 5 of 11 in the series 18 ஆகஸ்ட் 2019
சுப்ரபாரதிமணியன் :   இனிய தமிழ் கட்டுரைகள் ஆசிரியர் மணிமாலா மதியழகன் , சிங்கப்பூர் வெளியீடு : கரங்கள் பதிப்பகம், கோயம்புத்தூர் மணிமாலா மதியழகன் அவர்கள் புனைவு இலக்கியத்தில் பல்வேறு அம்சங்களை சிறுகதைகளாக தொடர்ந்து எழுதிக் கொண்டிருப்பவர் அவரின் சமீபத்திய முகமூடிகள் சிறுகதைகள் குறிப்பிடத்தக்க தொகுப்பாகும் ,அவர் சிறுவர்களுக்கும் சில கட்டுரைகள் எழுதியிருக்கிறார் அதன் தொகுப்பாக இந்த நூல் அமைந்துள்ளது. பெரும்பாலும் பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்களுக்கு பாடத்திட்டத்தை தாண்டி பொதுத் தலைப்பில் கட்டுரைகள் எழுதும் அவசியம் பல சமயங்களில் ஏற்படுகிறது .அதுபோன்ற சமயங்களில் குழந்தைகளுக்கு வழிகாட்ட இன்றைக்கு ஆசிரியர்களுக்கு இன்றைய கல்வி முறையில் அவகாசம் அளிக்கப்படுவதில்லை.ஆசிரியர்களே பெருமளவில் மன அழுத்தத்தில் இருக்கிறார்கள்இந்த சூழலில் மாணவர்களுக்கான சிறு கட்டுரைகள் மற்றும் அவர்கள் பேச வேண்டிய விஷயங்கள் குறித்த சிறு சிறு கட்டுரை நூல்கள் போன்றவை அதிக அளவில் விற்பனையாகின்றன. இந்த தொகுப்பு தமிழகத்திலிருந்து வரும் தொகுப்புகளிலிருந்து பலவிதங்களில் வித்தியாசப்பட்டு இருக்கிறது காரணம் ஒரு புனைவு எழுத்தாளர் மாணவர்களுக்காக எழுதும் போது அவர்களுக்கான மொழியை எளிமைப்படுத்த வேண்டி இருக்கிறது மாணவர்கள் கட்டுரைகளாக எழுத வேண்டிய தலைப்புகள் விடயங்கள் அல்லது பேச வேண்டிய, உரையாற்ற வேண்டிய விடயங்களில் ஆய்வு செய்து தோன்றியத் தலைப்பை தேர்வு செய்வது மிகவும் நல்லது. தமிழகத்தில் ஆசிரியர்களும் கல்வியாளர்களும் எழுத்தாளர்களும் தலைப்பு செய்யும் தலைப்புகளை விட இவர் தேர்வை  சிறப்பாகச்செய்திருக்கிறார். தலைப்புகள் சிங்கப்பூர் சூழலுக்கு மிகவும் பொருத்தமாக இருக்கின்றன முதல் தலைப்பு மாணவர்கள் தமிழில் ஏன் பேச வேண்டும் என்பது.  பிற தலைப்புகளை கவனியுங்கள் நவீனயுகத்தில் மறுபயனீடு ,தகவல் தொழில்நுட்பம் இன்றைய மாணவர்களின் முன்னேற்றத்திற்கு தடையா, ஒரு மாணவன் வளர்ச்சிக்கு இணைப்பாட நடவடிக்கை எப்படி கைகொடுக்கிறது அல்லது இல்லை, தன்னம்பிக்கை என்ற பெயரில் இன்றைக்கு புத்தகங்களும் உரைகளும் நிகழ்த்தப்படுகின்ற சூழல்களில் அவ்வகை விஷயங்கள் மாணவர்களுக்கு கை கொடுக்கிறதா, தொடக்கப் பள்ளியில் சிறந்து விளங்கும் பலர் உயர்நிலைப் பள்ளிகளில் கல்வியில் பின்தங்க காரணம் என்ன,  சிங்கப்பூரில் நீ வாழ்ந்து வருவதற்கான காரணம் என்ன, குடும்ப உறவுகளை மேம்படுத்தும் வழிமுறைகள், கைபேசி பொது இடங்களில் பயன்பாடு ,சிங்கப்பூரில் மூப்படையும் மக்களும் அவர்களின் பிரச்சனைகளும், செய்தித்தாள்களை வாசிப்பதால் மாணவர்களின் புதிய உலக அனுபவம் இப்படி பல குறிப்பிட்ட தலைப்புகளில் இந்த கட்டுரைகளை எழுதி இருக்கிறார், அதையும் தாண்டி செல்ல பிராணிகள் மீது மனிதர்கள் காட்டும் அன்பு, மாணவனின் கல்வி முன்னேற்றத்திற்கு உறுதுணையாக இருப்பவர்கள் பெற்றோர்களா ,  நூல்களை வாசிப்பது மாணவர்களை புரியுமா, சேமிப்பின் அவசியம், சிறந்த முறையில் கல்வி பயில ஆரோக்கியமான உடல்நலம் போன்ற தலைப்புகளையும் சொல்லலாம் இந்த்த் தலைப்புகளை ஒரு புனைவு எழுத்தாளர் என்ற அளவில் இறுக்கமான மொழியைப் பயன்படுத்தாமல் மிக எளிமையான மொழியைப் பயன்படுத்தி இருக்கிறார் என்பது முக்கியமான அம்சம்.குழந்தைகளுக்கானது என்ற வகையில்.   அதே சமயம் இன்னும் கீழே இறங்கி வந்து அவர் கட்டுரைகளில் பயன்படுத்துகிற பல சொற்களை , அதன் எளிமையான பொருட்களை அந்தந்த கட்டுரைகளின் இறுதியில் கொடுத்திருக்கிறார். ஒரு மூன்று பக்க கட்டுரையை எடுத்துக்கொண்டால் பின்னால் இந்த வார்த்தைகளை சொல்லும் பொருளும் என்ற வகையில் தந்திருக்கிறார். பொருள் எந்த  அடிப்படையில் என்பதையும் தந்திருக்கிறார். அவை எல்லாம் சாதாரண வார்த்தைகள் தான். ஆனால் மாணவர்களுக்கு அந்த வார்த்தைகளை இன்னும் எளிமைப்படுத்தி நல்ல தமிழில் கொடுக்க முயன்றிருக்கிறார் என்பதால் முக்கியத்துவம் பெறுகிறது . உதாரணங்களைப் பாருங்கள் .  ஆதாரமான என்றால் அடிப்படையான, புறந்தள்ள என்றால் தவிர்த்தல், ஆயுள்  என்றால்… நிலை என்றால்…. இனிமையான அர்த்தங்களை கூட அந்த கட்டுரைகளின்  இறுதியில் ஒவ்வொரு கட்டுரை முடிவிலும் கொடுத்திருக்கிறார் என்பதுதான் முக்கியமாக இருக்கிறது. மாணவர்கள் தமிழில் குறைபாடு உடையவராக இருந்தாலும் அல்லது கடினமான வார்த்தைகளை புரிந்து கொள்ள தயாராக இருந்தாலும் இந்த அகராதி பயன்படுகிறது இன்னொரு குறிப்பிட்ட விசேஷம் இருக்கிறது அந்தக்கட்டுரைகளை , பாடங்ளை,  சில சம்பவங்களைவைத்துக் கொண்டு ஆரம்பத்தில் விரித்துக் கொண்டு போகும்போது ஒரு நல்ல அணுகுமுறை வாசிக்க ஏதுவாகிறது . சிங்கப்பூரில் ஏப்ரல் மாதத்தில் நடைபெறும் தமிழ்மொழி விழாவையொட்டி அந்த மாதம் முழுக்க நூற்றுக்கணக்கான கூட்டங்கள் நடைபெறுவதை கேள்விப்பட்டிருக்கிறேன் .அந்தக் கூட்டங்களில் எல்லாம் மாணவர்களுடைய திறமையை வெளிக்காட்டும் வகையில் கட்டுரைப் போட்டிகளும் உரைகளும் நடத்தப்படுகின்றன. அந்த மாணவர்கள் தன்னுடைய தமிழ் மொழி உணர்வு,  இனப்பெருமை சார்ந்த நூல் வாசிப்பு  பற்றி பேசுவதற்கு காரணமான  அடிப்படை அம்சங்களை இந்த கட்டுரைகள் தந்திருக்கின்றன, பேசப்பேச தமிழும் இனிக்கும் படிக்கப் படிக்க அறிவும் சிறக்கும் என்ற புதுமொழிகள் இந்தக் கட்டுரைகளின் மூலம் வெளிப்படுகின்றன,  வெளிநாட்டு தொழிலாளர்கள்,  நெகிழி போன்றவற்றின் பயன்பாட்டில் அதிக அபாயத்தை ஒருபுறம் சொல்கிறபோது சிங்கையின் முக்கிய மனிதர்கள் பற்றிய விவரங்கள் இந்த நூலில் இணைக்கப்பட்டிருப்பது இந்த கட்டுரைகளுக்கு இன்னும் பலம் சேர்க்கிறது. பல்வேறு இனத்தவருடன் பழக வேண்டியுள்ள நிலையில் சிங்கப்பூர் மாணவர்களுக்கு தாய்மொழியில் பேசுவது சவால் நிறைந்த ஒன்றாக உள்ளது. இதனால் அவர்களுக்கு ஆங்கிலத்தில்  சரணடைந்து பின்  தாய்மொழியில் உரையாடுவதற்கான சந்தர்ப்பம் குறைகிறது. இதன் காரணமாய் மாணவர்களுக்கு தமிழில் படிப்பதும் சுமையாகத் தெரிகிறது .இவற்றைக் களைய அவர்கள் தன்னுடைய ஆர்வத்தை புரிந்து கொண்டிருக்கிற சூழலை வளர்க்க இதில்  19கட்டுரைகளும்  6  சிறு உரைகளும்  உள்ளன சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகம், தங்கமீன் கலை இலக்கிய கூட்டங்களில் இவர் கலந்து கொண்டுவருகிறார் .பெரும் பாராட்டைப் பெற்ற கட்டுரைகள் இவை. சிங்கப்பூர் போன்ற நாடுகளில் சிறுவர் இலக்கியம் , சிறுவர்களுக்கான நூல்களை தமிழில் படைப்பது என்பது எழுத்தாளர்களுக்கும் ஒரு சவாலாக இருக்கிறது . படைப்பிலகியத்துடன் சேர்ந்துதான்  செய்ய வேண்டி இருக்கிறது. அதற்கான மொழியும் எளிமையும் அணுகுமுறையும் முக்கியமாகத் தேவையாக இருக்கிறது .அந்த அணுகுமுறையை இந்த நூல் கொண்டிருக்கிறது .தொடர்ந்து மணிமாலா மதியழகன் அவர்கள் சிறுவர் இலக்கிய நூல்களில் தொடர்ந்து அக்கறை கொள்ள வேண்டும் என்பதில் முதல் படியாக இந்த நூலைக் கொள்ளலாம். அந்த வகையில் இந்த நூல் தமிழகத்தில் கூட இன்னும் மறுபிரசுரம் செய்யப்படுகிறபோது தமிழ் சிறுவர்களுக்கும் இளைஞர்களுக்கும் வழிகாட்டும் ஒரு நூலாக அமையும் . இந்த நூலை கோவை கரங்கள் பதிப்பகம் வெளியிட்டுள்ளது சுப்ரபாரதிமணியன் :  

 

Series Navigationநூலக அறையில்பரிசோதனைக் கூடம்
author

சுப்ரபாரதிமணியன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *